சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 17 ஜனவரி, 2011
ஆடுகளம் விமர்சனம்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஜெயபாலன் கிஷோர் தபசி நடிப்பில் ஆடுகளம் வெளிவந்துள்ளது ஆடுகளம். நேற்று மாலை பெங்களூரில் குடும்பத்துடன் பார்த்தேன். தமிழ் சினிமா இப்போதெல்லாம் நிறைய நம்பிக்கை தருகிறது. மகிழ்ச்சி.
கதை :- ஒரு பர பர நாவல் போல பயணிக்கும் கதை. கருப்புக்கு (தனுஷ்) சேவல் சண்டை தான் உயிர். சேவல் சண்டையின் எல்லா நுணுக்கங்களும் தெரிந்தவர் பேட்டைகாரர் ( ஜெயபாலன்) . கருப்பு அவரை தன் குருவாக தந்தையாக நினைக்கிறார். கருப்பு தயார் செய்த சேவல்களில் ஒன்று சரியில்லை என அதை அறுத்து போட்டு விட சொல்கிறார் பேட்டைகாரர். ஆனால் கருப்பு மனமில்லாமல் அதை செய்வதில்லை. அதே சேவல் ஒரு சந்தர்பத்தில் போட்டியில் வென்றுவிட பேட்டைகாரருக்க்கு கருப்பின் மேல் பொறமை வளர்கிறது. பொறாமையின் உச்சத்தில் கருப்பை மொத்தமாய் அழிக்க துரோகத்தை ஆயுதமாக்குகிறார்..
ஆடுகளம் நிகழ்வது மதுரையில். மதுரையின் வட்டார தமிழ் மணக்கும் வசனங்கள். எல்லா நடிகர்களுமே வசனங்களை அதனை லாவகமாக பேசுகிறார்கள். இதனால் அவற்றை புரிந்துகொள்ள அவ்வபோது எனக்கு சிரமம் ஏற்பட்டது. ஒரு ஆங்கில படம் பார்ப்பது போல மிகுந்த குவிப்புடன் படம் பார்க்க வேண்டி இருந்தது.
சேவல் சண்டை படத்தின் கதையை முடுக்கி விடும் கருவி. கதாபத்திரங்களின் தொழில், உணர்வுகள், தன்முனைப்பு எல்லாம் சேவல் சண்டையின் வழியாகவே வெளிப்படுகிறது. காசு உணவு உறவு இவை எல்லாம் தாண்டி மனிதன் தனக்கான வட்டத்தை எதோ ஒன்றின் வழியில் உருவாக்கி கொள்கிறான். மதம் இனம் மொழி சாதி நாடு மட்டுமல்ல அது சேவல் சண்டையாக கூட இருக்கலாம். சேவல் சண்டை நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அது சற்று மிகையாகவும் சில இடங்களில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் துணையுடனும் எடுக்கப்படிருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆடுகளத்தை அதன் யதாரத்தம் அதிகம் கெடாமல் விறுவிறுப்புடன் காண்பித்து இருக்கிறார்கள். (கொஞ்சம் ameros perros இன் நாய் சண்டையை ஞாபகபடுத்தினாலும் கூட)
படத்தின் முதல் பாதி சேவல்கள் சண்டையிட இரண்டாம் பாதியில் அதே ஆக்ரோஷத்துடன் மனிதர்கள் வாழ்வெனும் ஆடுகளத்தில் சண்டையிடுகிறார்கள். பொறாமையும் துரோகமும் சந்தேகமும் முட்டி மோதிக் கொள்கின்றன. உணர்வுகள் சம்பவங்களோடு சிக்கலில்லாமல் பிண்ணி பிணைவதை திரைக்கதையக்குவது மிகவும் சிரமம் என்றே நினைக்கிறேன். ஆடுகளம் இதில் வெற்றியடைகிறது.
தனுஷ், ஜெயபாலன் இருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்கள். கேமராவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரையின் நிலவமைப்பை உயிர்ப்புடன் கண் முன் நிறுத்துகிறது கேமரா. பாடல்களில் சமாளித்தாலும் பின்னணி இசையில் மீண்டும் மீண்டும் இளையராஜாவின் வெற்றிடத்தை நினைத்து கொள்ள வைக்கிறது ஜி.வி. பிரகாஷின் இசை.
இனி பிரச்சனைகளுக்கு வருவோம், ஆடுகளத்தின் பிரச்னை சற்று வித்தியாசமானது. தங்குதடையில்லாமல் செல்லும் திரைக்கதையே அதன் பிரச்னையாகவும் அமைந்து விடுகிறது. 2.5 மணி நேரம் சமபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது அதிக குவிப்பை பார்வையாளனிடம் கோருகிறது. ஒரு சராசரி தமிழ் பார்வையாளன் இன்னும் அதற்க்கு பழகவில்லை என நினைக்கிறேன். இது ஒரு புறம் இருக்க சம்பவங்களின் தொடர் அரங்கேற்றம் பாத்திரங்களின் வார்ப்பை, தன்மைகளை முறையாக உள்வாங்க முடியாமல் செய்து விடுகின்றன. ஆடுகளத்தின் பிரச்னை இந்த அவசரம் தான்.
அதே போல , பேட்டைகாரர் தட்டையான கதாபத்திரம் இல்லையென்றாலும் அவருக்கு விழும் வில்லன் இமேஜ் நெருடுகிறது . கருப்பு அவர் மேல் இறுதியில் காட்டும் அளவுக்கு அதிகமான பிரியம் அல்லது நன்றியுணர்வு அதன் காரணமாய் அவருக்கு அவன் அளிக்கும் மன்னிப்பு இதெல்லாம் வணிக சினிமாவின் பார்முலா போலத்தான் உள்ளது. கருப்பு பேட்டைகாரரை மீறி கோழி சண்டை விடுவது, அவர் ஆத்திரப்படும் போது அவரிடம் இருந்து விலகி வாழ்வது என தன்னை இழக்காமல் பயணிக்கும் திரைக்கதை இறுதியில் மெல்ல வணிக சூத்திரங்களுக்குள் அடங்குகிறது. முதல் paathiyil கோழி சண்டையில் எதிராளியாய் வரும் போலீஸ் மற்றும் அவர் சார்ந்த பாத்திரங்கள் தேவைக்கும் அதிகமான அளவு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இதனால் படம் முன்பாதியில் ஒரு படம் போலவும் பின் பாதியில் மற்றொரு படம் போலவும் தோற்றமளிக்கிறது.
குறைகளை தாண்டி இது மனித உறவுகளை ஆடுகளத்தில் விட்டு மோதி பார்க்க செய்யும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம். இந்த இரண்டாவது படம் முலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைப்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள்.
புதன், 22 செப்டம்பர், 2010
கமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.
கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.
---------------------------------------
நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.
உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம். ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்) இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.
ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance ஐ உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.
தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை. இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித ‘அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு ‘அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு தெரிந்தது சாகெத் ராம் அல்ல பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல். உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.
நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும் கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும் இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள் தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.
உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.
ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக) தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் - என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.
படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில் கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும் மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.
அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).
கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).
கொரிய மொழி இயக்குநரான கிம் கி டுக் (Spring,Summer,Fall,winter.. and Spring படத்தின் இயக்குநர்) இயக்கிய ‘The Breath' படம் பார்த்தேன். அழகான படம்.
படத்தின் அழகு அதன் மௌனத்தில் இருந்த்தது. அதிகம் வசனங்கள் இல்லாமல் கிம்மின் முத்திரைகளோடு.
ஒன்றேகால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை சொல்கிறார். கணவனின் தகாத உறவு பற்றி அறியும் பெண் மரணதண்டனை கைதி ஒருவனுடன் கொள்ளும் காதல் தான் கதையின் மையச் சரடு. கணவன் - மனைவி, கைதி- காதலி, கைதி- சக கைதி என மூன்று காதல்கள். உரசல்,பொறாமை, கோபம், வருத்தம், வன்முறை என உறவுகளின் பல பரிணாமங்களோடு ஒரு மாலை நேரக் கவிதையின் போதையோடு கதை மெள்ள நகர்கிறது.
தற்கொலைக்கு பல முறை முயலும் மரணதண்டணைக் கைதியிடம் காதல் கொள்ளும் பெண் அவனை மகிழ்ச்சி கொள்ள செய்வதற்க்காக ஒவ்வொரு முறை அவனை சந்திக்கும் போதும்,சந்திக்கும் அறையை ஒரு பருவகாலத்தினை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கிறாள். அந்த பருவகாலத்திற்க்கு ஏற்றாற் போல் உடை அணிகிறாள். அந்த பருவ காலத்திற்கு ஏற்ற பாடல்களை பாடுகிறாள்.
அவனுடன் தனக்குள்ள உறவை கற்பனையான பருவ மாற்றங்களோடு கழிக்கும் அவள் அந்த உறவை வேக வேகமாக முடித்து கொண்டு,தன் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறாள்.
எத்தனை சுயநலமானவை உறவுகள். ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான். தன்னை விட்டு செல்லும் எங்கிருந்தோ வந்த உறவு அதன் பிரிவிக்கான நியாயங்களை அவனிடம் உணர்த்தி விட்டு செல்வதாக தான் நான் நினைக்கிறேன்.
ஆனால் பிரிவில் நியாய தர்மங்கள் இல்லை. அது தரும் வலிக்கு அவை புரிவதும் இல்லை.
தன் சக கைதியின் காதல் கலந்த நட்ப்பை தன் புதிய காதலிக்காக ஒதுக்கும் போது ஒரு பழைய உறவு வெறி கொள்கிறது. அவனை இறுதியில் கழுத்தை நெறித்து கொல்கிறது.
கொலை ஒருவனுக்கு ஆறுதல் என்றால் கொல்லப்படுதல் மற்றொருவனுக்கு ஆறுதல்.
என் மனதில் அதிகம் பதியாத உறவு கணவன் நாயகியிடம் கொண்டிருக்கும் அசட்டையும், பின் உணர்ந்து தன் தகாத உறவை முறித்து கொள்வதும் தான். அவனது மற்றைய உறவு பலமற்று காட்டப் படுகிறது (கதை அந்த உறவினை காட்சிபடுத்த தேவை இல்லை என கிம் நினைத்து இருக்கலாம்). அதே போல அந்த ஜெயிலரின் சபலம் கூட ஏதோ கதையில் ஒட்டுப் போட்டு தைத்தது போல நிகழ்கிறது. கதையின் ஆத்மாவிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாத சேற்க்கையாகவே அதைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும்குறைகள் பெரிதும் நம்மை சங்கடப்படுத்துபவையில்லை.
இறுதியில், நாயகி தன் கணவனுடன் குளிர் காலத்திற்கான பாடலை பாடிக் கொண்டிருக்க, அவளது காதலன் சிறையில் கண்ணீருடன் தன் கொலையை ஏற்பதாக முடியும் இந்த படம், கிம்மின் மற்றுமொரு கவிதை.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010
தமிழ் சினிமா - 50 முக்கிய திரைப்படங்கள் (என் பார்வையில்)
தமிழ் சினிமா தன் பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்றும் சாதனமாக, கனவாக, அரசியலாக, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை எல்லாவற்றிலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்க முடியாமல் தன் இருப்பை அசைக்க முடியாமல் செய்துள்ளது. நான் சினிமாவில் இலக்கியம் போல அதிகம் என் கேள்விகளுக்கான பதிலை, நான் விரும்பும் அனுபவத்தை அடைந்ததில்லை. ஆனாலும் என்னையும் மீறி சினிமா என் கனவிலும் சினிமா தான் அதிகம் வந்துள்ளது. உங்களைப் போலவே.
சினிமா ரசிகன் என்ற வரையில் எனக்கு பிடித்த தமிழ் சினிமா என 50 படங்களை வரிசைப்படுத்த தோன்றியது. எனவே தான் இந்த பட்டியல். எனது அனுபவத்தோடு தமிழில் சினிமா அதன் கலை வடிவத்தை எதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய முயன்ற படங்கள்,கவனிக்கதக்க படங்கள் மற்றும் அந்தந்த காலகட்டத்தில் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்க்கு எடுத்து சென்ற படங்களை குறி வைத்து இந்த பட்டியல்.
ரசனை சார்ந்த பட்டியல் என்பதால் இத்தகு பட்டியல்கள் எப்போதும் எல்லாரையும் திருப்திப்படுத்துவதில்லை. ஆனாலும் அது சார்ந்த வசீகரம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.
1) மீரா -- 1945
படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சங்கீத முக்கியத்துவத்தை புறந்தள்ளி தமிழ் சினிமாவை பார்க்க முடியாது.
2)சந்திரலேகா -- 1948-- ஹாலிவுட் பாணி பிரம்மாண்டம். இப்போது பார்த்தலும் ’எப்படியா எடுத்தாங்க’ என தோன்றும்
3)பராசக்தி--1952 --திராவிட இயக்கத்தின் பிரச்சாரத்தை வலிமையாய் முன்வைத்த படம்.
4)அவ்வையார் -- 1953-- கே.பி. சுந்தராம்பாள் , பிரம்மாண்டம் இந்த இரண்டும் இப்படத்தின் சரித்திர முக்கியத்துவத்திற்கான காரணம்.
5) அந்த நாள் -- 1954-- குரோசவா வின் ‘ரோஷோமன்’படத்தை தழுவி எடுத்ததாக கூறப்படும் இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய பரிசோதனை முயற்சி.
6) ரத்தக்கண்ணீர் --1954--சமூக அவலங்களை தனி மனித தன்முனைப்பை ராதாவின் பகடி மூலம் வெளிப்படுத்தும் படம்.
7)மதுரை வீரன் -- 1956 -- படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சமூக முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது.
8)சிவகங்கை சீமை -- மருது சகோதரர்கள் பற்றிய படம். film noir எனும் வகையை எங்கங்கே தொடுகிறதோ என தோன்றும். கமலாவின் நடனம், இசை, துயரம் என பல எல்லைகளில் நிரூபிக்க முயன்று பெருமளவில் கவனம் பெறாமல் போனது. காரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் அதே வருடம் வந்ததே. கட்டபொம்மனுக்கு கிடைத்த cult status இப்படத்திற்கும் கிடைக்காதது வருத்தம். என் தட்டில் வைத்தால் கட்டபொம்மனை விட இதை சிறந்த படமாக கூறுவேன்.
9) பாசமலர் -- 1961-- படத்தின் அதிநாடகத்தன்மையை மீறி உறவு சிக்கல்களை தமிழ் சூழலில் அழுத்தமாய் சொன்ன படம்.
10)நெஞ்சில் ஓர் ஆலயம் -- 1962 -- தமிழ் சினிமாவிற்கு வேறு பரிமாணத்தை கொடுத்த படம். மூன்றே கதை மாந்தர்கள், ஒரு கதைக்க்களம், சிறுகதை போன்ற திரைக்கதை.
11) கர்ணன் -- 1964-- மகாபாரத கதை மாந்தரில் முக்கிய ஆளுமை கர்ணன் பற்றிய காவிய நடை கொண்ட படம்.
12) காதலிக்க நேரமில்லை -- 1964-- இன்றும் இளமை துள்ளும் மனதிற்க்கு எதோ ஒரு வகையில் நெருக்கம் தரும் நகைச்சுவை படம்.
13) திருவிளையாடல் -- 1966 -- காவிய நடை பக்தியில் இசை நடிப்பு என எல்லாம் பொருந்தி வந்து அதனளவில் முழுமை அடைய முயன்ற படம்.
14) தில்லானா மோகனாம்பாள் -- 1968 -- மூல நூல் படிக்கவில்லை. ஆனாலும் படம் ஒரு நல்ல பழைய கிளாசிக் நாவல் படிக்கும் அனுபவம் தரும்.
15)முஹம்மது பின் துக்ளக் -- 1971-- அரசியல் பகடியில் இன்று வரை தமிழில் இதை மிஞ்சி படம் இல்லை என்பது என் கருத்து.
16) அரங்கேற்றம்-- 1973-- சமூக ஒழுக்க நெறிகள் குறித்து நாடகபாணியில் சாட்டயடியாய் கேள்விகளை எறிந்த படம்.
17) பதினாறு வயதினிலே--1977-- தமிழ் சினிமாவை கிராமத்திற்க்கு அழைத்து வந்த படம். வலுவான திரைக்கதைகாக இன்றும் பேச வைக்க்ம் படம்.
18) அழியாத கோலங்கள் -- 1979 -- நாடகத்தன்மை இல்லாமல் விடலை பருவ கனவுகளை சொன்ன படம்.
19) பசி -- 1979 -- படம் பார்க்கவில்லை; ஆனாலும் சமூக அக்கறையில் தட்டிக்கழிக்க முடியாத படமாகிறது.
20)உதிரிப்பூக்கள் --1979-- வசனங்கள் குறைந்த அமைதியில் கூட தீயாய் சுட முடியும் என domestic violence குறித்து வந்த முக்கியமானபடம்.
21) நண்டு-- 1981-- நெடு நாள் முன் பார்த்தது. சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொல்ல்ம் படம்.
22) தில்லு முல்லு -- 1981-- எத்தனை முறை பார்த்தாலு சலிக்காமல் சிரிக்க வைக்கும் படம்.
23) சலங்கை ஒலி-- 1983-- மறக்க முடியாத இசை, வலுவான திரைக்கதை.
24)ஆண்பாவம் -- 1985 -- இயல்பான மிக எளிமையான நகைச்சுவை மூலம் மற்ற பல படங்களை தாண்டி செல்லும் படம்.
25) சிந்து பைரவி -- 1985 -- விடுகதை போல் உறவு சிக்கல்களில் விளையாடும் படம். மறக்க முடியாத இசை.
26) சம்சாரம் அது மின்சாரம்--1986 -- மேடை நாடகபாணி படமென்றாலும், நல்ல திரைக்கதை மூலம் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத படம்.
27)நாயகன் -- 1987-- Godfather தழுவலாய் கூறப்படும் நாயகன், வேறுபட்ட கதைக்களம், கதை மாந்தர் மூலம் கவனத்தை பெரிதும் ஈர்த்த படம்.
28) வேதம் புதிது -- 1987 -- முக்கியமான சமூக கேள்விகளை வீசி எறிந்த படம்.
29) வீடு-- 1987-- நடுத்தட்டு மக்களின் கனவுகளையும் அது எவ்வளவு சாதரணமாக வீசி எறியப்படக்கூடும் என்பதையும் அழுத்தமாய் சொன்ன படம்.
30) சந்தியா ராகம் -- 1989-- தியேட்டரில் ரிலீஸானதா என்று கூடஎனக்கு தெரியாது. ஆனாலும் யதார்த்த பாணி நடுத்தர மக்கள் பிரச்னையை சொன்ன முக்கியமான படம். அசோகமித்திரன் சிறுகதை படித்த உணர்வு ஏற்படுத்திய படம்.
31) வருஷம் 16--1989-- ஒரு அழகான குடும்பம் உறவு சிக்கல்களால் சிதறுவதை வலுவான திரைக்கதை மூலம் சொன்ன படம்.
32) ஒரு வீடு இரு வாசல் -- 1990-- அனுராதா ரமணனின் சிறுகதையின் திரைப்பட ஆக்கம். கதை சொல்லலில் இரு கதைகளை ஒரு கோட்டில் கட்டும் யுத்தியை கையாண்ட படம்.
33)ரோஜா -- 1992-- இந்திய அளவில் கவனம் ஈர்த்த படம். கதை களம், புது வகை இசை என தமிழ் சினிமாவின் முக்கிய முயற்சி.
34) கருத்தம்மா--1994--பெண் சிசுக் கொலை பிரச்னையை பிரச்சார நெடி இல்லாமல் நல்ல திரைக்கதை மூலம் சொன்ன படம்.
35) இருவர் --1996 -- தமிழின் மிக குறைவான அரசியல் வரலாற்றுப் படங்களுல் ஒன்று. திரைக்கதையில் இன்னும் தெளிவு இருந்திருந்தால் மிக சிறப்பான படமாகி இருக்கும்.
36) ஹே ராம்-- 2000- கோட்சேவின் உளவியல், காந்தியின் விமர்சனம் பற்றிய கதையை சில புதிய சினிமா உத்திகளோடு சொன்ன படம்.
37) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -- 2000-- தமிழ் கதை முறையில் ‘sense and sensibility' நாவலின் திரைப்பட ஆக்கம்.
38) பாரதி-- 2000 -- தமிழின் முக்கிய கவிஞரான பாரதியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
39)அழகி-- 2002-- வாழ்க்கை எங்கு சென்றாலும் முள்ளாய் அப்பபோது தைக்கும் முதல் காதலை மையமாய் கொண்ட படம்.
40) கன்னத்தில் முத்தமிட்டால்-2002-- ஈழ பிரச்னையை கையாண்ட மிக சொற்ப படங்களுல் ஒன்று.
41) அன்பே சிவம் -- 2003 -- Planes Trains and Automobiles படத்தை போல் கதைப்போக்கு கொண்ட படம். மனிதாபிமானம்,மதம், கமியூனிசம் இவற்றோடு விவாதம் நிகழ்த்தும் படம்.
42) இயற்கை-- 2003-- நெய்தல் நிலத்தில் நிகழும் கதை. ஒரு சங்கப்பாடலை போல, ஒரு பழைய classic novel போல கதை சொன்ன படம்.
43)காதல்-- 2004-- யதார்த்த பாணியில் காதல் அது சார்ந்த சமூக சிக்கல்களை காட்டிய படம்.
44) விருமாண்டி -- 2004 -- தூக்கு தண்டனை குறித்த விமர்சனம் கொண்ட படம். ஒரு சம்பவம் ஒவ்வொருவர் நோக்கில் வேறுபட்ட சித்திரங்களாய் பதிவதை கதை சொல்லும் முறையாகக் கொண்டது.
45) ஆட்டோகிராஃப் --2004-- காதல் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் நிகழக்கூடும் என்பதை மையமாக்கிய படம்.
45)புதுப்பேட்டை-- 2006 -- 'City of Gods' படத்தின் சாயல் கொண்டகூலிப்படை வாழ்க்கையை கதைக்களமாய் கொண்ட படம்.
46) வெயில் -- 2006 -- வீடுகளில் நிகழும் வன்முறை ஒருவனது வாழ்க்கையை சிதறடிக்கும் கதை.
47)இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -- 2006 -- காமிக்ஸ் கதை முறையில் சரித்திர கதை. சமகால அரசியலை நகைச்சுவையில் விமர்சனம் செய்த படம்.
48) சுப்ரமணியபுரம் -- 2008-- உறவுகளை துரோகத்தின், சந்தர்ப்பத்தின் கூரிய கத்தி குத்தி கிழிப்பதை சொல்லும் படம்.
49) ஈரம் -- 2009 -- தமிழில் வந்த பேய்ப்படங்களில் நல்ல திரைக்கதையுடன் வந்த ஒரே படம்.
50) நான் கடவுள் -- 2009-- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலின் சாயலுடன் வந்த படம். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட,கவனிக்கப்படாத உலகத்தை காட்டிய படம்.
பின்னிணைப்பு -- இதில் நான் பட்டியலில் இருந்து 50 படங்கள் என்று குறுக்கிக் கொண்டதால் நீக்கிய படங்களும் உண்டு ;
சபாபதி (1941),மிஸியம்மா (1955),வீரபாண்டியக்கட்டபொம்மன் (1959),தேன் நிலவு (1961),ஆயிரத்தில் ஒருவன் (1965), பாமா விஜயம் (1967),ஞான ஒளி ( 1972), உயர்ந்த மனிதன் (1968),அவள் ஒரு தொடர்கதை (1974),அவள் அப்படித்தான் (1978), நிழல் நிஜமாகிறது ( 1978), கன்னிப் பருவத்திலே (1979), இன்று போய் நாளை வா ( 1981),மண்வாசனை (1983),முந்தானை முடிச்சு (1983),புரியாத புதிர் (1990),மகளிர் மட்டும்(1994),கற்றது தமிழ்(2007),பசங்க(2009) , ஆயிரத்தில் ஒருவன் (2010)
இன்னும் பார்க்காததால் சேர்க்காத படங்களும் சில உண்டு.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
தமிழ் சினிமா சில அயோக்கியத்தனங்கள்..
கீழுள்ள பத்தி ’டூரிங் டாக்கீஸ்’ என்ற ஓர்குட் குழுமத்தில் 3/10/08 அன்று நான் செய்த பதிவின் மீள்பிரசுரம்.
தமிழ் சமூகத்தில் சினிமாவின் இடம் எல்லாருக்கும் தெரிந்தது.. சினிமா செல்லாத இடம் இல்லை. ஆனால் நம் சினிமா சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? சமூகத்தின் எண்ணங்களை வாழ்வியல் நெறிகளை பெருமளவு மாற்ற கூடிய ஆயுதமாக சினிமா உள்ளது.. ஆனால் வணிக ரீதியான வெற்றிக்காக கீழ் நிலை சமரசங்களை எடுத்தாளும் சில இயக்குனர்களை நினைக்கும் போது கோபத்தை விட வருத்தமே எனக்கு அதிகம். இவைகளை சமரசங்கள் என்று சொல்வதை விட அவர்களது மன நிலையே அப்படி தான் இருக்கிறது.. அதையே அவர்களது படைப்புகளும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை என்பது நம் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய பகுதி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எந்த நிலையில் உள்ளது? நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுத தோன்றியது.. காரணம் நெடு நாளாகவே இது என் மனதை சங்கடப்படுத்திய ஒன்று.

ஹாலிவுடின் ஒரு படம் "shallow hal" வணிக பார்முலா நகைச்சுவை படம். ஆனால் வணிக யுக்திகள் அனைத்தும் இருந்தும் நாகரிகமான நகைச்சுவை படம். அழகான பெண் காதலியாய் கிடைக்க எண்ணும் ஒரு சராசரி இளைஞன், ஒரு மனோதத்துவ டாக்டரால் அக அழகு உள்ளவர்களையே புற அழகு உள்ளவர்களாகவும் காணும் மன நிலை அடைகிறான். ஒரு குண்டுப் பெண்ணை அழகான பெண்ணாக எண்ணி காதலிக்கிறான். அழகான குழந்தைகளை பார்க்கிறான்.. அந்த குண்டுப் பெண்ணோடு பழகும் ஒரு அழகான வாலிபனை பார்கிறான்.. இறுதியில் எல்லாம் சரியான பிறகு அந்த அழகான குழந்தைகள் தீயில் கருகிய குழந்தைகள், அழகான வாலிபன் அவ்வளவு அழகு இல்லாதவன் என்றும் தெரிகிறது, இறுதியில் அந்த குண்டுப் பெண்ணை தன் காதலோடு முழுமையாக ஏற்கிறான் (பரிதாபத்தினால் அல்ல) என படம் அழகு குறித்த நம் மனப்பான்மையை பற்றி யோசிக்க வைக்கிறது. இது ஒரு முழு நீள நகைச்சுவை வணிக படம்.. நுணுக்கமாக பார்த்தால் 'shallow hal' நிறைய குறைகள் உள்ள படம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மனநிலை கோளாறு பற்றி யோசிக்கும் படம்.
தமிழில் இது போன்ற படம் எதிர்பார்க்க முடியுமா? தெரியவில்லை. (நெடு நாள் முன்பு நானும் ஒரு பெண் வந்தது.. ஆனால் அதிலும் பச்சாதாபமே அதிகம் கையாளப்பட்ட உணர்வு) இது போல் வர வேண்டாம். இதற்க்கு எதிர் மறையான படங்களாவது வராமல் இருக்கலாம்.
நமது நகைச்சுவை பெரும்பாலும் சமூகத்தின் மாறுபட்ட உடல், வாழ்க்கை முறை உள்ள சிறுபான்மையினர் பற்றிய கிண்டலாகவே அமைந்து உள்ளது.. அழகு, மாறுபாடு, குறை பாடு இவற்றை ஏற்க முடியாத தன்மை இயல்பானது. ஆனால் மட்டுப் படவேண்டிய ஒரு உணர்வு.. சக மனிதனை அவனது மாறுபாடுகள் நீங்க ஏற்பது அடிப்படை மனித நெறி. இதை கிண்டல் செய்வது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன??
கவுண்டமணி செந்தில் எப்போதும் மாறு கண் உள்ள பெண்கள், கறுப்பு பெண்கள் இவர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்கள். அடுத்து உயரம் குறைவானவர்கள் இவர்கள் எப்போதும் நகைச்சுவை பகுதிக்கு தான்..
பேரழகன் படத்தில் சூர்யா காதலுக்கு ஜோதிகா தான். ஒரு உயரம் குறைந்த பெண்ணை அவர் அவமதிக்கிறார். அந்த பெண்ணும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக கோமாளி போல வந்து போகிறார்.. . இந்த நியாய தர்மங்கள் எனக்கு புரிவதே இல்லை. காது கேளாதவர்களும் கிண்டலுக்கு பாத்திரமானவர்களே.... முன்பு இத்தகைய பல நகைச்சுவை காட்சிகளை ரசித்து உள்ளேன்.. இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறேன். இவற்றை எல்லாம் வெறும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இப்போது எனக்கு போய் விட்டது.. சமிபத்தில் ஒரு திருமங்கையின் blog படித்த போது இந்த கேலியும் கிண்டலும் அவர்களை எந்த அளவு வேதனை படுத்தும் என உணர முடிந்தது. அரவாணிகளை நாம் எதோ கிண்டல் செய்ய மட்டுமே பிறந்தவர்களை போல் கையாளும் கையவாளித்தனம் என்று ஒழியும்? எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள் ?
அரசியல் கன்றாவிகளை அம்பலமாகும் காட்சிகளை நறுக்க தவறாத சென்சார் போர்ட் இதையெல்லாம் ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.. எல்லாவற்றையும் ஏற்று கொண்டு செல்லும் மனபோக்கு நம்மிடம் தாராளமாக உள்ளது.. just ஜோக் தானே, சினிமா தானே... இதெல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது .. ரொம்ப யோசிக்க கூடாது.. இது தான் நம் மனநிலை.. மாறுபாட்டை கிண்டல் செய்வது நமக்கு ஜோக் அவர்களுக்கு உயிர் வேதனை என்று எப்போது உணரப் போகிறோம்??
இது போன்ற காட்சிகளை உதாரணம் சொல்ல எத்தனையோ படங்கள் உள்ளன. எடுத்துக்காட்ட நினைத்தால் ஏகப்பட்ட காட்சிகள் மனதில் வருகின்றன.. சமிபத்தில் ஓர் பால் விழைவு உள்ளவர்கள் பற்றி கிண்டல் ஆரம்பித்து உள்ளது.. மொழி போன்ற தரமான படமாக கருதப்படும் படங்களும் இதில் விதி விலக்கல்ல. இவை நகைச்சுவையா ?
சமூகத்தின் அங்கிகாரம் அற்ற சாராரை, சற்று மாறுபட்ட புற லட்சணங்கள் உள்ளவர்களை கிண்டல் செய்ய மட்டும் தான் தோன்றுமா?
23 ஆம் புலிகேசி போன்ற பொறுப்புள்ள சில நகைச்சுவை படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் எந்த உணர்வுகளை தூண்ட வேண்டும் தூண்ட கூடாது என்ற பொறுப்பு கடமை படைப்பாளிக்கு உள்ளது. (23 ஆம் புலிகேசியில் கூட அரவாணி ஒருவர் அந்தப்புர அழகிகளின் மேற்பார்வையாளராக காட்ட படுகிறார். யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது /இருந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு சமூகத்தின் மன நிலை மாற வேண்டி இருக்கும் போது இப்படி காண்பிப்பது தேவையா? வடிவேலு அவருக்கு பணம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பும் போது ஒரு கீழ் நிலை ஆளாகவே அவரை நடத்துகிறார்.. இதை சிம்பு தேவன் போன்ற படைப்பாளி வேறு விதமாக கையாண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்து இருக்கும்!)
காது கேளாதோர், வாய் பேசாதோர், மாறு கண் உள்ளோர், கறுப்பான பெண்கள், மாறுகண் உள்ளவர்கள், குண்டானவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், தொழு நோய் உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள்,வயதானவர்கள்,அரவாணிகள்,ஓர் பால் விழைவு உள்ளவர்கள், எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள், மக்களும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்!!
நமது ஹீரோக்கள் ஆனால் பெண்களின் பாகங்கள் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள், அவர்கள் கற்பு பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசுபவர்கள், ரவுடிகள்,கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள்,இரு தாரம் கட்டியவர்கள், புகை பிடிப்பவர்கள், சோகம் வந்தால் தண்ணி அடிப்பவர்கள்.. உண்மையில் இந்த பண்புகளே கிண்டல் செய்ய படவேண்டிய பண்புகள். ஆனால் இவை இன்றைய heroism..
ஒரு பொறுப்பான சமூகம் யாரே எல்லாம் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.. யாரை எல்லாம் மறுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் கதாநாயகர்களாக வரித்து கொண்டு உள்ளோம்.
இந்த அநியாயம் ஓயும் வரை நமது கலை ஒரு நோயாளிக் கலையே. நமது சமூகம் இதை பார்த்து சிரித்து மகிழும் வரை ஒரு நோயாளி சமூகமே..
நகைச்சுவை செய்ய தெரியவில்லை என்றால் "shallow hal" பார்க்க வேண்டாம் .. நமது nsk, தங்கவேலு, சந்திரபாபு இவர்களது நகைச்சுவையை பாருங்கள்.. போதும் போதும் எனும் அளவு அவர்களிடம் கற்று கொள்ளலாம் சிரிக்க வைக்க..

திங்கள், 29 மார்ச், 2010
அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்
வசந்தபாலனின் ’வெயில்’ கொடுத்த எதிர்பார்ப்பில் ஜெயமோகனின் பப்ளிசிட்டியில் :) நிச்சயம் ஒரு நல்ல படமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடனே ’அங்காடித் தெரு’ பார்க்க சென்றேன். நல்ல படமா? நிச்சயமாக. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கண்டிப்பாக. ஆனால் ‘ஆனால்’ என்ற ஒரு இழுவை படம் முழுதும் என்னை தொற்றிக் கொண்டே தான் இருந்தது. காரணங்களை போகிற போக்கில் சொல்கிறேன். தமிழ் சினிமா மேல் நம்பிக்கை தரும் மற்றுமொரு படமாக அங்காடித் தெருவை நான் மட்டும் இன்னும் நிறைய பேர் சொல்லத் தான் போகிறார்கள். களம், கதை மாந்தர் ,திரைக்கதை எல்லாமே முதிர்ச்சியுடன் மிகுந்த குவிப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் நிஜமான கரிசனத்துடன் வந்த சில தமிழ்ப்படங்களில் ‘அங்காடித் தெரு’ வும் ஒன்று. நாம் கடை வீதியில் மிக வேகமாக கடக்கும் போது நம்மை நிறுத்தி இதோ பார் இந்த மனிதர்களை இவர்கள் வாழ்க்கை எத்தனை நெருக்கடியானது, அவர்கள் வாழும் இந்த கடைத் தெரு போலவே என்று ஒவ்வொருவர் பற்றியும் கதை சொல்கிறது. நீ ப்ளு கலர் சுரிதார் கேட்ட்யே அந்த பொண்ணு காசுல தான் அவ அப்பா மருந்து வாங்குராரு. ஸ்டோன் ஜீன்ஸ் கேட்ட பையன் காலைல இருந்து 50-60 கிலோ மூட்டைகளை குடோன்ல எறக்கிட்டு ஷிஃப்டுல வந்தான். நீ ஷிஃபான் சாரி கேட்ட பொண்ணு இந்தா பத்து நிமிஷம் முன்னாடி தான் அவ மார அவ முதலாளி தடவுனான் இந்த ப்ளாட்பார்ம்ல கர்ச்சீப் விக்குற பெரியவரு 15 வருஷமா இங்க தான் பொழப்பு நடத்துராரு. அவுரு பொஞ்சாதி கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில ஊசி மாத்தி போட்டு செத்து போச்சு. கிளிப்பு விக்குற பொண்ணுக்கு போன ஜனவரில ரோட்டோரமா படுத்து இருக்கும் போது லாரி அடிச்சு ரெண்டு காலும் போயிடுச்சு என எல்லாம் நமக்கு தெரிந்த கதைகள் ஆனால் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவை. காசு இல்லை என்றாலும் கலர் கலராய் கனவுகள் வராமலா போய்விடும்? வ்ந்த கனவுகளுக்கு என்ன விலை தர? கனவுகளின் நிழலாய் யதார்த்தம் பயமுறுத்தும் போது எவ்வளவு சமரசங்கள் மனசாட்சியை உறுத்தாமல் நிகழும்? என கேள்விகளை நம் முன் இறைக்கிறது இந்தப் படம். ரங்கனாதன் தெருவில் இறைந்து கிடக்கும் பொருட்கள் போலவே படம் நெடுகிலும் கேள்விகள். யதார்த்ததை தொலைக்காத முகங்கள் படத்தின் பெரும் பலம். அதிலும் அந்த கதாநாயகி அத்தனை உயிர்ப்பு அவளிடம்.
ஆனால்..
படம் முடியும் போது ஒரு முதிர்ந்த அழுத்தமான படம் பார்த்து விட்டு வரும் போது கிடைக்கும் அனுபவம் என்னிடம் இல்லை. காரணம் நிறைய. மிக முக்கிய காரணம் மிகை உணர்ச்சியும் நாடகத்தனமும் படம் முழுதும் விரவியிருக்கின்றன. ‘இங்க பாத்தியா இவன் எவ்ளோ பாவம்னு இங்க பாத்தியா இவன் எவ்வளவு கஷ்டத்துலயும் நம்பிக்கயோட இருக்கானு’ என்பது போல ஒரு வித சொல்லிச் சொல்லி காண்பிக்கும் அணுகுமுறை நம்மை படத்திலிருந்து விலக்குகின்றன. போகிற போக்கில் சொல்லப் படவேண்டிய வாழ்க்கை துணுக்குகள் கூட அத்தனை அதி உணர்ச்சியுடன் அரங்கேறுகின்றன. உ.ம் - உயரம் குறைந்த மனிதரும் அவர் மனைவியும். இதில் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் குறைபாட்டுடன் பிறக்கிறது. அதற்க்கு அந்த பெண் தரும் விளக்கம் வேறு. குறையுடைய மனிதனுக்கு குறையுடன் குழந்தை பிறக்கும் என்ற தேவையற்ற ஒரு செய்தி தான் இந்த அதி உணர்ச்சி கதையால் கிடைக்கும் ஒரே நன்மை. பிண்ணனி இசை பெரும் பலவீனமாக நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இசை பின்னால். நாடகத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன். ஹ்ம்ம்.. ரொம்பவே இளையராஜாவை மிஸ் பண்றேன் :(
குறைகளை மீறி அங்காடித் தெரு என்னை கவர்ந்த படம். காரணம் அது துணிவுடன் முன் வைக்கும் முதலாளித்துவ பிரச்சினைகள் மட்டுமல்ல. அது காட்டும் சராசரிகளின் கனவுகளால் அவர்கள் சமரசஙகளால். இவை எல்லாவற்றையும் விட அதன் அடி நாதமாய் இருக்கும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. அந்த பிளாட்பார பாய் சொல்வது போல ‘ மனுசன நம்பி கடை போட்டு இருக்கேன், பத்து வருஷமாச்சு. இன்னும் நம்பிக்கை குறையல’ இந்த நம்பிக்கையுடன் தான் மானுடம் இயங்குகிறது. யானை வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழும் ஒன்றுக்கு ஒன்று துணையாய், நம்பிக்கையுடன். இதே செய்தியுடன் படம் முடிகிறது. மிக அழகாய்.
பி.கு: அட இப்போ எல்லா படத்துலயும் நம்ம விக்கிரமாதித்தியன பாக்க முடியுது நம்ம கவிஞர் கொஞ்ச நாள்ல ஸ்டார் நடிகர் ஆகிடுவார் போல :-)
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
அவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்
இணையத்தில் எங்கு தடுக்கினாலும் 'அவதார்' பற்றிய செய்திகள், துணுக்குகள் உண்டு. நுணுக்கங்களுக்கு காமரூன் கொடுத்துள்ள முக்கியத்துவம் படம் பார்க்கும் பொதுஹ் எல்லாருமே உணர்ந்தது. இது பற்றிய விவரங்கள் , விவாதங்கள் நிறைய தளங்களில் நிகழ்கிறது.
மீள் யதார்த்தக் (fantasy) கதைகளில் அறிவியல் விதிகளை சுந்ததிரமை கட்டுடைக்க முடியும் என்பது தான் அந்த படைப்பின் சுவாரஸ்யம்.அதே சமயம் புனையவு முற்றிலும் யதார்த்தத்தை புறக்கணித்தாலோ மீறினாலோ அதன் அழகு சிதறும் அபாயம் உள்ளது. காரணம் நாம் அழகை ரசிப்பதோ உள்வாங்குவதோ, நாம் இது வரை சேகரித்த அனுபவங்களை உருவ அமைப்புகளை கொண்டே. அதனால் மீள் யதார்த்தம் குறிப்பாக அறிவியல் மீள் யதார்த்தம் ஒரு பெண்டுலம் போல அறிவியல் விதிகளை மீறுவதும் அதற்குள் முடங்குவதுமாய் ஊசலாடும்.
அவதாரும் அப்படியே. கேமரூன் பண்டோராவின் நில அமைப்புகளை நாவிக்களின் மொழியை எப்படி அதீத கற்பனையாய் உருவாக்கினாரோ அதே அளவு அறிவியல் மற்றும் பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கவும் முயன்றுள்ளார். இதன் இருக்கங்களும் தளர்வுகளும் படைப்பாளியின் சுதந்திரத்திற்கு ஏற்பவும் ஹாலிவுட் மரபிற்கு ஏற்பவும் கூடக் குறைய நிகழ்கிறது.
ஒரு உயிரியல் மாணவனாக ஒளிரும் அந்த காடு என்னை நிச்சயம் கவர்ந்தது. அதன் பிரம்மாண்ட கொடிகள்,தொட்டாசிணுங்கி செடிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் நிற்கும் அந்த நெடிய மரம் எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் மாபெரும் உண்மைகள் நீரில் அலையாடும் பிம்பமாய் மிதக்கிறது.
இதற்க்கு கேமரூன் ஒரு உயிரியல் விஞ்ஞானியை கொண்டு தாவரங்களின் இயல்பு மாறாமல் அந்த காடு உருவாக முனைந்திருக்கிறார்.
ஜோடி ஹோல்ட் (Jodie Holt) என்ற தாவரவியல் விஞ்ஞானி இதற்க்காக பங்காற்றியுள்ளார்.
காட்டின் அமைப்பு உயிரியல் விதிகளை அதிகமாய் மீறி விடாமல் இருக்க அவர் அப்படத்தின் வரைகலை நிபுணர்களுக்கு உதவியுள்ளார். முக்கியமாய்
தாவரங்களின் ஒருங்கிணைப்பு (அந்த காட்டில் உள்ள எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே) இதற்க்காக, தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இருப்பதாய் சொல்ல இயலாது. ஆனால் தாவரங்களில் இப்போது அதிகம் ஆராய்ச்சி செய்யப்படும் சமிக்ஞை பரிமாற்றம் (Signal Transduction) கூறுகளை பயன்படுத்தவது சுலபம். காரணம் இதன் கூறுகள் இன்னும் முழுவதுமாய் நிறுவப்படாதவை. ஆதலால் கற்பனையை கொண்டு நமக்கேற்ப விரித்து கொள்ளலாம். தர்க்க ரீதியில் கேள்விகள் வராது. வந்தாலும் அதன் சாத்தியங்கள் குறித்த ஈடுபாட்டை தூண்டுவதாகவே அமையும். அந்த ஈவா புனித மரம காட்டின் மூளை போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த சமிக்ஞை பரிமாற்ற கூறுகளை அடிப்படையாக கொண்டு தான்.
இது மட்டுமல்ல மேலும் ஒரு படி பொய் இந்த தாவரங்களுக்கு முறையான தாவரவியல் பெயர்களை சூடி அவற்றுக்கான உயிரியல் தன்மைகளை ஆவணப்படுத்தியும் உள்ளனர். ஒத்த வகை தாவரங்கள் ஒரு குழுவாக தொகுக்கப்பட்டு தொகுப்பு வரைவும் (taxonomy) உருவாக்கப்பட்டுள்ளது. ப்ஸ்யூடோசைக்காஸ் அல்த்திசிம்மா (pseudocycas altisimma),ஒபிஸ்கஸ் ரோட்டண்டஸ் (obescus rottendus) என தாவரவியல் அறிஞர்களை கவரக்கூடிய பெயர்கள் தான் இந்த தாவரங்களின் பெயர்கள்.
பண்டோராவின் நிலவியல் அமைப்பின் படி தன் தாவரங்களின் உருவ அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாய் ஜோடி ஹோல்ட் கூறுகிறார்.
பண்டோராவில் புவியீர்ப்பு விசை குறைவு (பண்டோரவீர்ப்புவிசை??) ,கரியமிலம், செனான்,ஹைட்ரஜன் சல்பய்டு போன்ற வாயுக்கள் அதிகம். காந்த விசையும் அதிகம். இதனால் அதன் தாவரங்கள் அளவில் பெருத்தவையாக இருக்கும். மேலும், தண்டுகள் மேலே வேர்கள் கீழே என்ற புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட விதிகளுக்கு அதன் வளர்ச்சி அடங்காது. மாறாக காந்த விசைக்கு உட்பட்டு வளரும். இவையெல்லாம் ஜோடியின் யூகங்கள். கேமரூனின் கற்பனைக்கு துணை நிற்பவை.
என்னைஅதிகம் கவர்ந்தது அந்த காட்டின் ஒளி. உயிர் ஒளிர்வு (bio luminescence) என்பதை கொண்டு தன் கற்பனை காட்டை ஜொலிக்க விடுகிறார் கேமரூன். மின்மினிகளாய் காடே ஒளிர்வது அழகு.
இந்த ஒளிர்வு நாவிக்களின் தோலில் கூட ஓரளவு இருப்பதை நம்மால் காண முடிகிறது.
அனால் இதை வெறுமே அழகின அடிப்படையில் மட்டுமே ரசிக்க முடிகிறது. காரணம் உயிர் ஒளிர்வு அதிகம் நிகழ மிகுந்த இருட்டான வாழ்வியல் சூழலே காரணமாக இருக்க முடியும்
சூரியக்கதிர்கள் எட்ட முடிய ஆழ்கடலில் உள்ள உயிர்களுக்கு (80%-90% வரையான உயிர்கள்!) இரை தேடவும் உயிர் வாழவும் ஒரு கருவி ''உயிர் ஒளிர்வு'. அனால் பண்டோரா அடர இருள் காடல்ல.
நாவிக்களின் கண்களும் இருளில் இரை தேடும் மிருங்கங்களின் (nocturnal)
கண்கள் போல பெரிய கண்மணிகளை கொண்டவை. ஆனாலும் அவர்கள் இரவில் தூங்கி பகலில் வேட்டையாடும் உயிர்களே.
ஒரு மீள் யதார்த்த கதை இத்தகு கேள்விகள் அவசியமா என்றால் இல்லை தான். ஆனால் 'Pandorapedia'என்று விக்கிபீடியா தரத்தில் ஒரு தளம் நிறுவி, பண்டோராவை ஒரு கனவை உயிர் பெற செய்ய, அதை ஒரு கலாச்சார நிகழ்வாகக, ஒரு விவாதத் தளமாக்க முயல்கிறது அவதார் படக்குழு.
அவர்களிடம் நாம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை அசட்டுத்தனமாய் இருந்தாலும். கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய அசட்டுத்தனம் இன்றி வேறென்ன??
மேலும் சுட்டிகள்:
குறிப்புகள்:
இக்கட்டுரையின் பல கலைச்சொற்கள் நான் உருவாக்கியவவை. அவற்றில் பொருட்பிழையோ அல்லது அவ்வாறு விட மேலான கலைசொற்கள் புழக்கத்தில் இருந்தாலோ குறிப்பிடவும்.
மீள் யதார்த்தக் (fantasy) கதைகளில் அறிவியல் விதிகளை சுந்ததிரமை கட்டுடைக்க முடியும் என்பது தான் அந்த படைப்பின் சுவாரஸ்யம்.அதே சமயம் புனையவு முற்றிலும் யதார்த்தத்தை புறக்கணித்தாலோ மீறினாலோ அதன் அழகு சிதறும் அபாயம் உள்ளது. காரணம் நாம் அழகை ரசிப்பதோ உள்வாங்குவதோ, நாம் இது வரை சேகரித்த அனுபவங்களை உருவ அமைப்புகளை கொண்டே. அதனால் மீள் யதார்த்தம் குறிப்பாக அறிவியல் மீள் யதார்த்தம் ஒரு பெண்டுலம் போல அறிவியல் விதிகளை மீறுவதும் அதற்குள் முடங்குவதுமாய் ஊசலாடும்.
அவதாரும் அப்படியே. கேமரூன் பண்டோராவின் நில அமைப்புகளை நாவிக்களின் மொழியை எப்படி அதீத கற்பனையாய் உருவாக்கினாரோ அதே அளவு அறிவியல் மற்றும் பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கவும் முயன்றுள்ளார். இதன் இருக்கங்களும் தளர்வுகளும் படைப்பாளியின் சுதந்திரத்திற்கு ஏற்பவும் ஹாலிவுட் மரபிற்கு ஏற்பவும் கூடக் குறைய நிகழ்கிறது.
ஒரு உயிரியல் மாணவனாக ஒளிரும் அந்த காடு என்னை நிச்சயம் கவர்ந்தது. அதன் பிரம்மாண்ட கொடிகள்,தொட்டாசிணுங்கி செடிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் நிற்கும் அந்த நெடிய மரம் எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் மாபெரும் உண்மைகள் நீரில் அலையாடும் பிம்பமாய் மிதக்கிறது.
இதற்க்கு கேமரூன் ஒரு உயிரியல் விஞ்ஞானியை கொண்டு தாவரங்களின் இயல்பு மாறாமல் அந்த காடு உருவாக முனைந்திருக்கிறார்.
ஜோடி ஹோல்ட் (Jodie Holt) என்ற தாவரவியல் விஞ்ஞானி இதற்க்காக பங்காற்றியுள்ளார்.
காட்டின் அமைப்பு உயிரியல் விதிகளை அதிகமாய் மீறி விடாமல் இருக்க அவர் அப்படத்தின் வரைகலை நிபுணர்களுக்கு உதவியுள்ளார். முக்கியமாய்
தாவரங்களின் ஒருங்கிணைப்பு (அந்த காட்டில் உள்ள எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே) இதற்க்காக, தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இருப்பதாய் சொல்ல இயலாது. ஆனால் தாவரங்களில் இப்போது அதிகம் ஆராய்ச்சி செய்யப்படும்
இது மட்டுமல்ல மேலும் ஒரு படி பொய் இந்த தாவரங்களுக்கு முறையான தாவரவியல் பெயர்களை சூடி அவற்றுக்கான உயிரியல் தன்மைகளை ஆவணப்படுத்தியும் உள்ளனர். ஒத்த வகை தாவரங்கள் ஒரு குழுவாக தொகுக்கப்பட்டு தொகுப்பு வரைவும் (taxonomy) உருவாக்கப்பட்டுள்ளது. ப்ஸ்யூடோசைக்காஸ் அல்த்திசிம்மா (pseudocycas altisimma),ஒபிஸ்கஸ் ரோட்டண்டஸ் (obescus rottendus) என தாவரவியல் அறிஞர்களை கவரக்கூடிய பெயர்கள் தான் இந்த தாவரங்களின் பெயர்கள்.
பண்டோராவின் நிலவியல் அமைப்பின் படி தன் தாவரங்களின் உருவ அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாய் ஜோடி ஹோல்ட் கூறுகிறார்.
பண்டோராவில் புவியீர்ப்பு விசை குறைவு (பண்டோரவீர்ப்புவிசை??) ,கரியமிலம், செனான்,ஹைட்ரஜன் சல்பய்டு போன்ற வாயுக்கள் அதிகம். காந்த விசையும் அதிகம். இதனால் அதன் தாவரங்கள் அளவில் பெருத்தவையாக இருக்கும். மேலும், தண்டுகள் மேலே வேர்கள் கீழே என்ற புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட விதிகளுக்கு அதன் வளர்ச்சி அடங்காது. மாறாக காந்த விசைக்கு உட்பட்டு வளரும். இவையெல்லாம் ஜோடியின் யூகங்கள். கேமரூனின் கற்பனைக்கு துணை நிற்பவை.
என்னைஅதிகம் கவர்ந்தது அந்த காட்டின் ஒளி. உயிர் ஒளிர்வு (bio luminescence) என்பதை கொண்டு தன் கற்பனை காட்டை ஜொலிக்க விடுகிறார் கேமரூன். மின்மினிகளாய் காடே ஒளிர்வது அழகு.
இந்த ஒளிர்வு நாவிக்களின் தோலில் கூட ஓரளவு இருப்பதை நம்மால் காண முடிகிறது.
அனால் இதை வெறுமே அழகின அடிப்படையில் மட்டுமே ரசிக்க முடிகிறது. காரணம் உயிர் ஒளிர்வு அதிகம் நிகழ மிகுந்த இருட்டான வாழ்வியல் சூழலே காரணமாக இருக்க முடியும்
சூரியக்கதிர்கள் எட்ட முடிய ஆழ்கடலில் உள்ள உயிர்களுக்கு (80%-90% வரையான உயிர்கள்!) இரை தேடவும் உயிர் வாழவும் ஒரு கருவி ''உயிர் ஒளிர்வு'. அனால் பண்டோரா அடர இருள் காடல்ல.
நாவிக்களின் கண்களும் இருளில் இரை தேடும் மிருங்கங்களின் (nocturnal)
கண்கள் போல பெரிய கண்மணிகளை கொண்டவை. ஆனாலும் அவர்கள் இரவில் தூங்கி பகலில் வேட்டையாடும் உயிர்களே.
ஒரு மீள் யதார்த்த கதை இத்தகு கேள்விகள் அவசியமா என்றால் இல்லை தான். ஆனால் 'Pandorapedia'என்று விக்கிபீடியா தரத்தில் ஒரு தளம் நிறுவி, பண்டோராவை ஒரு கனவை உயிர் பெற செய்ய, அதை ஒரு கலாச்சார நிகழ்வாகக, ஒரு விவாதத் தளமாக்க முயல்கிறது அவதார் படக்குழு.
அவர்களிடம் நாம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை அசட்டுத்தனமாய் இருந்தாலும். கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய அசட்டுத்தனம் இன்றி வேறென்ன??
மேலும் சுட்டிகள்:
Inventing the plants of 'Avatar'
Shining Examples: 10 Bioluminescent Creatures that Glow in Surprising Ways
குறிப்புகள்:
இக்கட்டுரையின் பல கலைச்சொற்கள் நான் உருவாக்கியவவை. அவற்றில் பொருட்பிழையோ அல்லது அவ்வாறு விட மேலான கலைசொற்கள் புழக்கத்தில் இருந்தாலோ குறிப்பிடவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
தமிழ் சினிமா தன் பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்ற...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...