மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html
மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது..
பொதுவாகவே தமிழில் கேலிசித்திரங்கள் குறைவு. இருந்தாலும் அவை குழந்தைகளுக்கு மட்டும் என்ற நினைப்பு உண்டு. அல்லது அரசியல் சார் சித்திரங்கள் . மதன் மற்றும் சிம்புதேவன் இதை கொஞ்சம் மாற்றியவர்கள்.கொஞ்சம் மட்டுமே.
நான் மிக ரசிக்கும் சித்திரக்கதைகளில் ஒன்று calvin and hobbes. சில முறை அக்கதை மாந்தன் கேல்வின் மனச்சித்திரத்தில் கொஞ்சம் மாறுபட்டாலும் அதையும் மீறி அக்கதைகளை மிகவும் விரும்பியதுண்டு.
தத்துவம், அறிவியல் ஆன்மிகம் உலகியல் கற்பனை நட்பு என எல்லா தளத்திலும் இந்த கதை சித்திரம் நிகழ்வதுண்டு.
இரு முக்கிய கதாபாத்திரங்கள் .
1) கேல்வின் -- சிறுவன்... நிறைய கற்பனை நிறைய குறும்பு மழலைக்கே உரிய தனி உலகை உருவாக்கி கொள்பவன்.
2) ஹாப்ஸ் -- கேல்வினின் புலி பொம்மை. பொம்மை என்பதை மீறி அவன் கற்பனையால் உயிர் பெற்று அவனோடு உறவாடுவது. இருவரும் அவ்வளவு நெருக்கம்.
மேலும் அவனது பெற்றோர் ,தோழி மற்றும் ஆசிரியை ஆகியோரும் அதிகம் வருவதுண்டு.
என் வலைப்பூவில் இவர்களது சித்திரக்கதைகள் தமிழில் மாற்றி தர விருப்பம்.
Bill Waterson காப்புரிமை கேட்காத வரை, எனக்கு சலிப்போ பொறுப்பின்மையோ ஏற்படாத வரை இவர்கள் அவப்போது வருவார்கள்.
