ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).

கிம்  கி டுக் -  இன்  ’மூச்சு’ (The Breath).கொரிய மொழி இயக்குநரான கிம் கி டுக் (Spring,Summer,Fall,winter.. and Spring படத்தின் இயக்குநர்) இயக்கிய ‘The Breath' படம் பார்த்தேன். அழகான படம்.
படத்தின் அழகு அதன் மௌனத்தில் இருந்த்தது. அதிகம் வசனங்கள் இல்லாமல் கிம்மின் முத்திரைகளோடு.
ஒன்றேகால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை சொல்கிறார். கணவனின் தகாத உறவு பற்றி அறியும் பெண் மரணதண்டனை கைதி ஒருவனுடன் கொள்ளும் காதல் தான் கதையின் மையச் சரடு. கணவன் - மனைவி, கைதி- காதலி, கைதி- சக கைதி என மூன்று காதல்கள். உரசல்,பொறாமை, கோபம், வருத்தம், வன்முறை என உறவுகளின் பல பரிணாமங்களோடு ஒரு மாலை நேரக் கவிதையின் போதையோடு கதை மெள்ள நகர்கிறது.

தற்கொலைக்கு பல முறை முயலும் மரணதண்டணைக் கைதியிடம் காதல் கொள்ளும் பெண் அவனை மகிழ்ச்சி கொள்ள செய்வதற்க்காக  ஒவ்வொரு முறை அவனை சந்திக்கும் போதும்,சந்திக்கும் அறையை  ஒரு பருவகாலத்தினை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கிறாள்.  அந்த பருவகாலத்திற்க்கு ஏற்றாற் போல் உடை அணிகிறாள். அந்த பருவ காலத்திற்கு ஏற்ற பாடல்களை பாடுகிறாள்.

அவனுடன் தனக்குள்ள உறவை கற்பனையான பருவ மாற்றங்களோடு கழிக்கும் அவள் அந்த உறவை வேக வேகமாக முடித்து கொண்டு,தன் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறாள்.
எத்தனை சுயநலமானவை உறவுகள். ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான். தன்னை விட்டு செல்லும் எங்கிருந்தோ வந்த உறவு அதன் பிரிவிக்கான நியாயங்களை அவனிடம் உணர்த்தி விட்டு செல்வதாக தான் நான் நினைக்கிறேன்.
ஆனால் பிரிவில் நியாய தர்மங்கள் இல்லை. அது தரும் வலிக்கு அவை புரிவதும் இல்லை.

தன் சக கைதியின் காதல் கலந்த நட்ப்பை தன் புதிய காதலிக்காக  ஒதுக்கும் போது  ஒரு பழைய உறவு வெறி கொள்கிறது. அவனை இறுதியில் கழுத்தை நெறித்து கொல்கிறது.
கொலை ஒருவனுக்கு ஆறுதல் என்றால் கொல்லப்படுதல் மற்றொருவனுக்கு ஆறுதல்.

என் மனதில் அதிகம் பதியாத உறவு கணவன் நாயகியிடம் கொண்டிருக்கும் அசட்டையும், பின் உணர்ந்து தன் தகாத உறவை முறித்து கொள்வதும் தான். அவனது மற்றைய  உறவு பலமற்று காட்டப் படுகிறது (கதை அந்த உறவினை காட்சிபடுத்த தேவை இல்லை என கிம் நினைத்து இருக்கலாம்). அதே போல அந்த ஜெயிலரின் சபலம் கூட ஏதோ கதையில் ஒட்டுப் போட்டு தைத்தது போல நிகழ்கிறது. கதையின் ஆத்மாவிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாத சேற்க்கையாகவே அதைப் பார்க்க முடிகிறது.

 ஆனாலும்குறைகள் பெரிதும் நம்மை சங்கடப்படுத்துபவையில்லை.

இறுதியில், நாயகி தன் கணவனுடன் குளிர் காலத்திற்கான பாடலை  பாடிக் கொண்டிருக்க, அவளது காதலன் சிறையில் கண்ணீருடன் தன் கொலையை ஏற்பதாக முடியும் இந்த படம், கிம்மின் மற்றுமொரு கவிதை.

6 கருத்துகள்:

 1. நல்ல விமர்சனம்,நறுக் சுருக். .>> ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான்><<<

  நுணுக்கமான வரிகள்

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான மற்றும் அழகான கட்சி அமைப்பு கொண்ட படம், இது குறும்பட இயக்குனர்களுக்கு பாடமாக இருக்கிறது என்று நினக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. >>செந்தில்-- பின்னூட்டதிற்க்கு மிக்க நன்றி செந்தில் (ப்ளாக்கரில் எதோ ப்ரசனை என நினைக்கிறேன்.. நேற்றே உங்களுக்கு பதில் பதிவு செய்தேன்) :(

  >> சிங்ககுட்டி -- நன்றி சிங்கம். நிச்சயம் கிம்மின் படங்கள் புதிய இயக்குனர்களுக்க்கு பாடமாய் இருக்க வேண்டியவை. அவரது நிதானமான அணுகுதல்,வசன திணிப்பு இல்லாதது எல்லாமே கலையின் முக்கிய கூறுகள்.

  பதிலளிநீக்கு
 4. இது பார்த்திருக்கிறேன்.நல்ல படம்,கிம் கி டுக் வசனங்களால் பேசமுடியாதவற்றை காட்சிகளால் பேசவைப்பவர்.ஸ்ப்ரிங் சம்மர் படத்திலிருந்து இவரை தேடத தொடங்கவேண்டும்,அதன் கிம் கி டுக் அசைக்கமுடியாத படப்பாளியாக தெரிவார்,நல்ல விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 5. இந்த படம் பார்த்துட்டேன் எழுத வேண்டிய லிஸ்ட்டில் இது இருக்கின்றது....

  பதிலளிநீக்கு
 6. >>பிரியன் -- கிம்மின் Spring Summer..முற்றிலும் வேறு களத்திலான வேறு கோணத்திலான படம். நிச்சயம் விரிவாக பேசப்பட வேண்டிய படமும் கூட..

  >> கட்டாயம் எழுதுங்க ஜாக்கி .. நிச்சயம் அதிகம் பேசப்பட வேண்டிய படைப்பாளி கிம்.

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...