சனி, 29 மே, 2010

மழை நடனம்

தமிழில் பெரிதும் அனிமேஷன் படங்கள் இல்லை. சுல்தான் வருவதாக சொல்லப்படுகிறது. (சுல்தானின் 3D ட்ரைலரில் அதிகம் என்னை கவரவில்லை )  எதேச்சயாக யூட்யூபில் பார்த்த இந்த 2D அனிமேஷன் என்னை கவர்ந்தது.  சித்திரங்கள் எந்த உலக அனிமேஷனுடனும் போட்டி போடும் வகயில் இருப்பது மகிழ்ச்சி தந்தது..

வியாழன், 27 மே, 2010

பழைய பரண் -- கவிதை

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் (அம்மை) அதிகம் வலைப்பூவிற்க்குள் வரமுடியவில்லை.

என் பழைய கவிதை ஒன்று எங்கோ வீட்டில் தட்டுப்பட அதை வலையில் ஏற்ற தோன்றிற்று. (பொதுவாக நான் அதிகம் கவிதை எழுதுவதில்லை.. ஏனெனில் அது எனக்கு அதிகம் வராத வடிவம்... ஆய்னும் அவ்வபோது ஆர்வத்தில் முயற்சிப்பதுண்டு.. அதில் ஒன்று)நீ கேட்டுப் பெற்ற மன்னிப்புகளால்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை.
ஒரு மன்னிப்பின் வலி தெரியுமா உனக்கு?

அது ஒரு கொலையுண்ட எதிர்பார்ப்பின்
பிணத்திலிருந்து வெளியேறும் நாற்றம்.
ஒரு நிராகரிப்பின் தோண்டி எடுக்கப்பட்ட
எலும்புத்துண்டு.
ஒரு அவமானத்தின் மீட்டெடுக்க முடியா
உச்சகட்ட குறுகல்.

போதும் உன் மன்னிப்புகள்
அவற்றை சேமிக்க கைவசமில்லை
என்னிடம்
பிணவறைகள்..

சனி, 1 மே, 2010

நிமிடக் கதைகள் - பூப்போட்ட சேலை.


”அப்ப வரட்டுமாம்மா” கேள்விக்கு அம்மவிடம் பதிலில்லை.  ஏதோ யோசனை போல.

அந்த அறையின் மின்விசிறி இறைச்சலுடன் காற்றைத் தள்ளியது.
முதியோர் இல்லத்தில் மின்விசிறிக்கு கூட மூப்பு.
“அம்மா...” அவள் கைகளை பற்றினேன். 
அம்மா நிமிர்ந்தாள்.
பெரிய பூப்போட்ட சேலை உடுத்தியிருந்தாள்.
அவளது வீங்கிய தைராய்டு சுரப்பியை பார்த்து, என் மகன்  ”பாட்டி பலூன முழுங்கிட்டாளாப்பா?”  என்று கேட்டது ஏனோ ஞாபகம் வந்தது.
‘போய்ட்டு வாப்பா.. கெளாக்கா ஊறுகா ஸ்டவுக்கு கீழ இருக்க ரேக்குல ஜாடில போட்டு வெச்சு இருக்கேன்.” என்றாள்.
சின்ன மவுனம்.
“சித்ராவை ராத்திரி படுக்கும் போது கேஸ் ரெகுலேட்டர ஆஃப்  பண்ண மறந்துராம இருக்க சொல்லு”
மீண்டும் ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள்.

நான் புறப்பட்டேன்.
அவளிடம் ஏதோ சொல்லாமல் விட்டு விட்டதாய் ஒரு உணர்வு.
பக்கத்தில் இருந்த பள்ளியில் மதிய இடைவேளை.  அம்மாக்கள்
தங்கள் பிள்ளைகளுக்கு லஞ்ச்  பாக்ஸோடு கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர்.
நிறைய பேர் சேலைகளில் பெரிய பூக்கள் மலர்ந்திருந்தன.

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...