திங்கள், 15 மார்ச், 2010

கேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )


        படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :(

மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html
மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது..


பொதுவாகவே தமிழில் கேலிசித்திரங்கள் குறைவு. இருந்தாலும் அவை குழந்தைகளுக்கு மட்டும் என்ற நினைப்பு உண்டு. அல்லது அரசியல் சார் சித்திரங்கள் . மதன் மற்றும் சிம்புதேவன் இதை  கொஞ்சம் மாற்றியவர்கள்.கொஞ்சம் மட்டுமே.


நான் மிக ரசிக்கும் சித்திரக்கதைகளில் ஒன்று calvin and hobbes. சில முறை அக்கதை மாந்தன் கேல்வின்  மனச்சித்திரத்தில்  கொஞ்சம் மாறுபட்டாலும் அதையும் மீறி அக்கதைகளை மிகவும் விரும்பியதுண்டு.


தத்துவம், அறிவியல் ஆன்மிகம் உலகியல் கற்பனை நட்பு என எல்லா தளத்திலும் இந்த கதை சித்திரம் நிகழ்வதுண்டு. 
இரு முக்கிய கதாபாத்திரங்கள் .
1) கேல்வின் -- சிறுவன்... நிறைய கற்பனை நிறைய குறும்பு மழலைக்கே உரிய தனி உலகை உருவாக்கி கொள்பவன். 
2) ஹாப்ஸ் -- கேல்வினின் புலி பொம்மை. பொம்மை என்பதை மீறி அவன் கற்பனையால்  உயிர் பெற்று அவனோடு உறவாடுவது. இருவரும் அவ்வளவு நெருக்கம். 
மேலும் அவனது பெற்றோர் ,தோழி மற்றும் ஆசிரியை ஆகியோரும் அதிகம் வருவதுண்டு.


என் வலைப்பூவில் இவர்களது சித்திரக்கதைகள் தமிழில் மாற்றி தர விருப்பம். 
Bill Waterson காப்புரிமை கேட்காத வரை, எனக்கு சலிப்போ பொறுப்பின்மையோ ஏற்படாத வரை இவர்கள் அவப்போது வருவார்கள். 

10 கருத்துகள்:

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. யார் சொன்னது தமிழில் கேலி சித்திரங்கள் குறைவு என்று? மறைந்த கார்டூனிஸ்ட் உதயன் நக்கீரனில் கேலி சித்திரங்கள் வரைந்தார், தற்போது தினமணியில் மதி, இந்த பட்டியலில் சேர்க்க விருப்பம் இல்லையென்றாலும் தினமலர் பீட்டர் ஆகியோர் கேலி சித்திரங்கள் வரைந்து கொண்டு தானே இருக்கிறார்கள் ராஜா. இவர்கள் வரைவது, வரைந்தது பெரும்பாலும் அரசியல் சார்பு உடையனவாய் இருப்பினும் கேலி சித்திர வகயைறாவில் தானே அடங்கும். சரி இதற்க்கு முன் நான் லீனா மணிமேகலை குறித்து இட்ட பின்னூட்டத்தை ஏன் அகற்றி விட்டீர் ராஜா? இதையாவது வெளியிடுவீர் என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. > பிரசன்னா.. நீ குறிப்பிட்ட கார்டூனிஸ்ட்டுகளின் படைப்புகளில் (உதயன் தவிர) எனக்கு ஓரளவு அறிமுகம் உண்டு. நான் சொன்னது தமிழில் கேலி சித்திரங்கள் ( இந்த சொல் எனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை.. வேறு சொல் உள்ளதா?) இரு வகையில் மட்டுமே அடங்கும் ஒன்று குழந்தைகளுக்கானது. மற்றது அரசியல் வகை (இதை இடுகையிலும் சொல்லி உள்ளேன்). இந்த வகை மாதிரிகள் கூட விரல் விட்டு எண்ணும் வகையில் தான் நிகழ்வதாக எனக்கு தோன்றுகிறது.
  நமக்கு பொதுவாகவே கேலி சித்திரங்கள் மேல் உள்ள குறைந்த மதிப்பும் இதற்கு ஒரு காரணம். கார்டூன்கள் வெறும் ஒரு சிறு பகுதியில் வரும் துணுக்காகவே இன்றளவும் பார்க்கபடுகிறது.

  ஒரு தொடராய், அரசியல் மீறி இது வரை தமிழில் ஏதேனும் கார்டூன் முயற்சி வந்துள்ளதா? (ஹ்ம்ம்.. கன்னித்தீவு தவிர .. ) அதிகபட்சம் அன்றைய நிகழ்வுகளின் விமர்சனம் மீறி நம் கார்டூன்கள் எதுவும் பேசுவதில்லை. உலக நடைமுறையில் கார்டூன்கள் நிறைய தூரம் சென்று விட்டது. கார்டூன் விமர்சனம், தத்துவம், காமம்,அறிவியல்,தினசரி, வாழ்வியல், எல்லாவற்றையும் தொடுகிறது. வழமை மீறிய வடிவம் பொருள் என எல்லா நிலையிலும் சோதனை முயற்சிகளும் நிகழ்கிறது.

  மதனையும், சிம்புதேவனயும் குறிப்பிட்டது இவர்கள் அரசியல் மீறிய தொடர் கார்ட்டூன்களை வெளியித்தர்க்காக மட்டுமே. மதனின் சிரிப்பு திருடன், வீடு ப்ரோக்கர் என சில தொடர் கார்டூன்கள் அரசியல் இல்லாமல் வந்தவை. சிம்புதேவனின் கிமுவில் சோமு, இன்னும் சில தொடர்கள் கதை வடிவில் வந்தவை. இரண்டு பேரின் முயற்சிகளுமே மிக தொடக்க முயற்சிகள்.சிரிப்பு துணுக்குகளின் வடிவ அளவு நீட்சி மட்டுமே அவை.
  கார்டூன்கள் மட்டும் அல்ல அனிமேஷன் மற்றும் கிராபிக் நாவல் வகைகளும் கூட தமிழிலில் இல்லாதது எனக்கு பெரும் வருத்தமே.

  அட அத விடு.. அழகான தமிழ் மொழி பெயர்ப்புல லயன் காமிக்ஸ்ல வந்த லக்கி லுக் எத்தனை பேருக்கு தெரியும்.. லயன் காமிக்ஸ் தமிழின் மிக கவனிக்கத்தக்க முயற்சியா இப்பவும் நான் நினைக்குறேன். எத்தனை பேருக்கு விஜயனோட கஷ்டம் தெரிஞ்சு இருக்க போகுது? அவரோட வட்டம் தவிர.. (ரத்தப்படலம் கொண்டு வர அவர் பட்ட கஷ்டங்கள் அவரே தலையங்கத்துல வெசனப்பட்டது).

  அவசரப்பட்டோ போற போக்குலையோ கார்டூன் முயற்சிகள் குறைவு னு சொல்லலே. இருக்கறது குறைவு.. அதற்க்கு அங்கீகாரம் இன்னும் ரொம்ப குறைவு அப்டின்னு வருத்தம் தான்.

  லீனா கட்டுரை பத்தி.. உன் பின்னூட்டத்தை நிச்சயம் நான் ஏதும் செய்யலே. (நீ வேற.. வர்ற ஒன்னு ரெண்டு பின்னூட்டத்தையும் எடுத்துட்டு என்ன செய்ய?.. ) அது நிறைய விவாதிக்கக் படவேண்டிய விஷயம. உன் பின்னூட்டம் ஏன் பதிவாகலைன்னு தெரியல. முடிஞ்சா இன்னொரு தடவ பதிவு செய். நிச்சயம் பேசலாம்.

  பதிலளிநீக்கு
 4. சிம்புதேவனின் 'இம்சை அரசன்' சித்திர தொடர்கதை உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, விகடனில் வந்ததை நினைவு. லக்கி லுக் தவிர்த்து, டெக்ஸ் வில்லர், இரும்புக்கை மாயாவி, மாயாவி, மாண்ட்ரேக் போன்ற காமிக்குகள் லயன், முத்து, ராணி காமிக்ஸ் போன்ற இதழ்களில் வந்தன. கேலிச் சித்திரங்கள் என்ற பதத்தை விட நீங்கள் சொல்லும் படைப்புகளை காமிக்குகளின் ஒரு பகுதியாகவே கருத்தில் கொள்ளலாம். இது போன்ற தமிழ் காமிக்குகளை தூண்டில் போட்டு பிடித்து, ஒரு மிகப்பெரும் பதிவர்களின் குழுமம் இருக்கிறது. நான் அறிந்தவரையில் ஒரு மிகச் சிறந்த பதிவர் இருக்கிறார் - கனவுகளின் காதலன். அந்த வலைமனையில் அவரைப் போன்றே பல காமிக் பிரியர்களின் வலைத்தளங்களும் உள்ளன.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ் 10 போன்ற திரட்டிகளில் உங்கள் வலைதளத்தை இணையுங்கள். அந்த அந்த திரட்டிகளின் ஒட்டுபட்டை, டூல் பார் போன்றவற்றையும் இணையுங்கள். இதன் மூலம் உங்கள் வலைதளத்தின் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். மொக்கை போடுற என்னையவே தமிழ்மணம் நட்சத்திரமா வர்ற ஏப்ரல் 5 - 12 வரை அறிவிச்சு இருக்காங்க. உங்க பதிவையெல்லாம் தலையில தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுவாங்க. அப்பிடியே நம்ம ப்ளாக் பக்கம் வந்தீங்கன்னா எதுனாச்சும் பின்னூட்டம் இல்லாங்காட்டி ஒட்டு போட்டுட்டு போங்க...

  பதிலளிநீக்கு
 6. முக்கியமா இந்த கம்மேன்ட்ஸ் பகுதியில இருக்கிற வேர்ட் வெரிபிகேசன் என்ற சொல் சரிபார்ப்பு வசதியை தூக்கிடுங்க. இதுனாலேயே பல பேர் பின்னூட்டம் போடா மாட்டாங்க...

  பதிலளிநீக்கு
 7. அன்பு பிரசன்னா, உன் பின்னூட்டத்திற்கு பெரிய பதில் டைப் செய்து சரியாக பதிகாமல் அழிந்துவிட்டது. :(
  லைன் காமிக்ஸ் தரத்திலும் வகையிலும் முக்கியமாக அதன் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ராணியை விட மேம்பட்டு தோன்றுகிறது. நீ அறிமுகம் செய்த தளங்களை பார்த்தேன். அட என்று வியந்தேன். இருக்கும் சில முயற்சிகளையும் எத்தனை ஆர்வமாய் ஆவணப்படுத்தும் முயற்சி.
  அவற்றை மேய்ந்தத்தில் நிறைய பழைய ஞாபகம்.
  வாண்டு மாமா - செல்லம் சித்திரக் கதைகள் மற்றுமொரு தமிழின் முக்கிய சிறுவர் சித்திரக் கதை முயற்சி. வாண்டுமாம்வின் பூந்தளிர் மற்றும் நிறைய சிறுவர் படைப்பு முயற்சிகள் (வாண்டு மாமாவின் கதைகள் நிச்சயம் இலக்கிய வகையறாவாய் என்னால் சேர்க்க முடியவில்ல என்றாலும் அதன் legendary status மற்றும் அவரது தீராத பங்களிப்பு இவற்றால் அவர் நிச்சயம் தமிழ் சிறுவர் படைப்புகளின் சிற்பி தான்)

  ஆனால் நான் அதிகம் சித்திரக்கதைகள் மற்றும் கொஞ்சம் பழைய ஞாபகங்களால் சிறுவர் காமிக்ஸ் பற்றியும் பேசினாலும் இந்த பதிவில் எனது ஆதங்கம் தமிழில் comic strip கலாச்சாரம் வளராதது குறித்தே. calvin gilbert போன்ற எளிய புத்திசாலித்தனமான strips தமிழில் இல்லை என்று கூட சொல்லலாம்.
  மற்றபடி உன் suggestions நிறைய பிரயோஜனம் தருபவை. ரொம்ப நன்றி. தமிழ் மணத்தில் மட்டும் தான் பதிவு செய்துள்ளேன். மற்ற திரட்டிகள் பற்றிய அறிமுகம் இல்லை. அவற்றிலும் பதிவு செய்து கொள்கிறேன். தமிழ் மணம் பட்டியிலும் அதிகம் கவனம் எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.
  word verification பற்றியும் தெரியாது. அதையும் பார்த்து கொள்கிறேன். (இதுல இவ்ளோ இருக்கா?? ) :-(

  பதிலளிநீக்கு
 8. NHM Writer அப்பிடின்னு ஒன்னு இருக்கு. அதை டவுன்லோட் பண்ணி யூஸ் பண்ணுங்க. நல்ல தமிழ் டைப்பிங் சாப்ட்வேர்.

  காமிக் ஸ்ட்ரிப்புகளை பொறுத்த மட்டில் தினமலரில் கொஞ்ச காலம் விக்கிரமாதித்தன் கதை வந்தது. அது ‘கன்னித்தீவை’க் காட்டிலும் நல்ல தரமான படங்களுடன் வந்தது. என் தந்தை அவருடைய சிறு வயதில் கொஞ்ச காலம் ‘கன்னித்தீவி’ன் கட்டிங்குகளை சேகரித்து வைத்தாராம். பூந்தளிர் போன்ற சிறுவர் இதழ்களிலும் ஒன்னு ரெண்டு காமிக் ஸ்ட்ரிப்புகள் வந்ததாய் நினைவு.

  வேர்ட் வெரிபிகேசனை தூக்குவது ரெம்ப சுலபம். Your Blogger Dashboard -> Layout -> Comments-> Show word verification for comments -> click on 'No' -> Save settings.

  பதிலளிநீக்கு
 9. தாங்க்ஸ் பிரசன்னா :) NHM ல தான் டைப் பண்ணுறேன்.. அழகி முதல்ல முயற்சி செஞ்சேன். ஆனா ஃபயர் ஃபாக்ஸ் கூட சரியா வேலை செய்யல. இது ரொம்ப சுலபமா இருக்கு. வேர்ட் வெரிஃபிகேஷன தூக்கி விட்டுடேன். பூந்தளிர், சிறுவர் மலர் இவற்றில் வந்த ஸ்ட்ரிப்புகள் நானும் படித்து உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 10. //...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

  லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...