என் பழைய கவிதை ஒன்று எங்கோ வீட்டில் தட்டுப்பட அதை வலையில் ஏற்ற தோன்றிற்று. (பொதுவாக நான் அதிகம் கவிதை எழுதுவதில்லை.. ஏனெனில் அது எனக்கு அதிகம் வராத வடிவம்... ஆய்னும் அவ்வபோது ஆர்வத்தில் முயற்சிப்பதுண்டு.. அதில் ஒன்று)
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை.
ஒரு மன்னிப்பின் வலி தெரியுமா உனக்கு?
அது ஒரு கொலையுண்ட எதிர்பார்ப்பின்
பிணத்திலிருந்து வெளியேறும் நாற்றம்.
ஒரு நிராகரிப்பின் தோண்டி எடுக்கப்பட்ட
எலும்புத்துண்டு.
ஒரு அவமானத்தின் மீட்டெடுக்க முடியா
உச்சகட்ட குறுகல்.
போதும் உன் மன்னிப்புகள்
அவற்றை சேமிக்க கைவசமில்லை
என்னிடம்
பிணவறைகள்..
விரைவில் உடல் நலம் பெற எனது அரவணைப்புகள் தோழர்...
பதிலளிநீக்குபிணவறைகளை இடித்து விடுவோம் ...
பிணங்களை புதைத்து விடுவோம் ...
நன்கு ஓய்வெடுங்கள் தோழர் ...
பின்னர் வருகிறேன் ....
அன்புடன்
நியோ
அரவணைப்புக்கு மிக்க நன்றி நண்பர் நியோ... இப்போது நன்கு தேறிவிட்டேன் (திங்கள் முதல் பணியில் சேர உத்தேசம்) ... இரு வாரங்களாகவே ஓய்வு தான். கவிதை குறித்த பதிவுக்கும் நன்றி. :)
பதிலளிநீக்குஉடல் நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன். கவிதை வரிகள் அர்புதம். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரொம்ப நன்றி சரவணன்.. உடல் நலம் நன்கு தேறிவிட்டது.. கவிதை குறித்த பாராட்டுக்கும் மிக்க நன்றி.. :)
பதிலளிநீக்கு