சனி, 1 மே, 2010
நிமிடக் கதைகள் - பூப்போட்ட சேலை.
”அப்ப வரட்டுமாம்மா” கேள்விக்கு அம்மவிடம் பதிலில்லை. ஏதோ யோசனை போல.
அந்த அறையின் மின்விசிறி இறைச்சலுடன் காற்றைத் தள்ளியது.
முதியோர் இல்லத்தில் மின்விசிறிக்கு கூட மூப்பு.
“அம்மா...” அவள் கைகளை பற்றினேன்.
அம்மா நிமிர்ந்தாள்.
பெரிய பூப்போட்ட சேலை உடுத்தியிருந்தாள்.
அவளது வீங்கிய தைராய்டு சுரப்பியை பார்த்து, என் மகன் ”பாட்டி பலூன முழுங்கிட்டாளாப்பா?” என்று கேட்டது ஏனோ ஞாபகம் வந்தது.
‘போய்ட்டு வாப்பா.. கெளாக்கா ஊறுகா ஸ்டவுக்கு கீழ இருக்க ரேக்குல ஜாடில போட்டு வெச்சு இருக்கேன்.” என்றாள்.
சின்ன மவுனம்.
“சித்ராவை ராத்திரி படுக்கும் போது கேஸ் ரெகுலேட்டர ஆஃப் பண்ண மறந்துராம இருக்க சொல்லு”
மீண்டும் ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள்.
நான் புறப்பட்டேன்.
அவளிடம் ஏதோ சொல்லாமல் விட்டு விட்டதாய் ஒரு உணர்வு.
பக்கத்தில் இருந்த பள்ளியில் மதிய இடைவேளை. அம்மாக்கள்
தங்கள் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸோடு கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர்.
நிறைய பேர் சேலைகளில் பெரிய பூக்கள் மலர்ந்திருந்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
nalla irukunga kutti kadhai :)
பதிலளிநீக்குநல்ல கதை...உண்மையும்கூட... அந்த வலியையும் எதார்த்தத்தையும் பதிவு செய்த விதம் மனதில் தைத்தது.....
பதிலளிநீக்குநன்றி அஷிதா :)
பதிலளிநீக்குபாலாஜிக்கும் ரொம்ப நன்றி... ரொம்ப சின்னதா எழுதுனதால அவ்ளோ சரியா சொன்னது சேருமானு யோசனயா இருந்துச்சு... நன்றி பாலாஜி.. :)