ஞாயிறு, 7 மார்ச், 2010

வினவு..வசை பாடு.. (லீனா மணிமேகலை கவிதை அரசியல்)

 வினவு தளத்தில் லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளின் போக்கை விமர்சனம் செய்தது கண்டு கிட்டத்தட்ட அதிர்ந்து தான் போனேன்.

பெண்ணியம் குறித்து பேசும் போதெல்லாம் சிலவருடங்கள் முன்பு நிறைய எரிச்சல் பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை அலப்பறை என்பது தான் ஏன் எண்ணம..
ஆனால் மெல்ல எனது எண்ணங்கள் மாறின.. நிச்சயம் பெண்ணுக்கான இடம் இந்த சமூகத்தில் சரிவர வழங்கப்படவில்லை என்ற எண்ணம் மிக உறுதி பெற்றது.  திரைப்படங்கள், நண்பர்கள், உறவினர், பொது இடம் மட்டுமல்ல நான் மிக ரசிக்கும் இலக்கியவாதிகள் சிந்தனையாளர்களிடம் கூட ஆண் சார்ந்த விழுமியங்கள் சமூக பார்வை இருப்பது தெளிவாய் இருந்தது.

வினவு கட்டுரை அப்படியான நமது ஒட்டுமொத்த சமூக பார்வையில் இருந்து பெருமளவு வித்யாசப்படவில்லை. சாவகாசமாய் சேற்றை வாரி இறைத்து உள்ளார்கள்.
லீனாவின் கவிதை மொழி மீது கோபமா அவரது செயல்பாட்டின் மீது கோபமா என்று புரியாத அளவு கட்டுரை அவரது எல்லா செயல்பாடுகளையும் இரு கவிதைகளின் அடிப்படையில் வினவுகிறது. அக்கவிதைகளை மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என குற்றம் சாட்டுகிறது.

அதிகார மையத்தை ஆண் குறியாக பாவிக்கும் சற்று காட்டமான கவிதைகள் அவை.

ஆண் என்பவனை அதிகார மையத்தின் உச்சமாக ஒரு பெண் உணர்வது நெடுங்காலமாய் தனக்கென்ற தனிப்பட்ட ஒழுக்க விதிகள், தனிப்பட்ட  சமூக நியாயங்கள் கொண்ட ஒரு பாலினத்தின் நியாயமான உணர்வாகவே தோன்றுகிறது.
அது மட்டுமே அல்லமால் அது ஒட்டு மொத்த ஆண்களை சாடும் கவிதையா என்றால் இல்லை ஆணின் அதிகார பிம்பத்தை உலகின் அதிகார பீடத்தோடு ஒப்பிடும் கவிதை. கவிதையின் அம்சம் நிச்சயமாய் ஒரு மஞ்சள் பத்திரிக்கை மரபின் கவிதை அல்ல. அது வினவு கட்டுரையாளரும் அறிவார்.


கவிதையின்  பொருளில்சார்பு தன்மை இருந்தால் நிச்சயம் கேட்கலாம். ஏன் சிங்கள அதிகாரம் இவர் கண்ணுக்கு தெரியவில்லை என்பதுவிவாதிக்க பட வேண்டிய ஒன்று. அதன் பின்எது அரசியல் உள்ளதாஎன்று கேட்கலாம்..
அல்லது லீனா அவரது குறும்பட தயாரிப்பு பிரச்சனை அதிலிருந்து வெளிவந்த முறை பற்றிய விமர்சனம் தான் அந்த கட்டுரை என்றால் அந்தகவிதை சார்ந்து அப்பிரச்சனையை முன் வைப்பது தேவையா?அச்சம்பவம் முழுக்க உண்மை என்று ஊர்ஜிதம் ஆகிருந்தால் (அக்கட்டுரை அப்படி ஏதும் அச்சம்பவத்தின் முழுமையான நிலை பற்றி ஆராய்ந்து கருத்து உருவாக்கியதாய் தோன்றவில்லை) இந்த கவிதையின் காட்டமான  போக்கிற்கும் லீனாவின் செயல்பாட்டிற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று விமர்சனம் செய்யலாம்.
ஆனால் வினவு அதையும் தாண்டி அவரது மொழியிலேயே கேட்கிறேன் என்று சொல்லி கொண்டு வசை பாடி உள்ளார்கள்.

.  சிநேகன் குட்டி ரேவதியிடம் கொண்டிருந்த அதே  பிரச்சனை தான் இந்த கட்டுரையிலும் இருப்பதாய் தோன்றுகிறது. லீனாவின் செயல்பாடுகளில் உள்ள இரட்டை நிலை பற்றிய விமர்சனம்  என்பதை தாண்டி அந்த கட்டுரை பொதுவாக பெண்கவிதை மொழி பற்றிய வசையாக இலக்கிய கோட்பாடுகளுக்கு பின்னோக்கு சிந்தனை உள்ளவர்கள் விதிக்கும் தடைகளாக  பெண்ணின்  ஒழுக்க வரைமுறைகளை சட்டமிடுவதாக (லீனா ஒரு portfolio வைத்து இருக்கிறார் என்பதை கூட ஒரு குற்றமாக முன் வைக்கிறது  ) மட்டுமே அக்கட்டுரையை பார்க்க முடிக்கிறது..
வினவின் இக்கட்டுரை மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

பின்னூட்டத்தில் பெண்ணின் உடல் அரசியல் குறித்த தெளிவான பார்வை நம்மிடம் இல்லை என்கிறார்கள். அது அப்படி தான் என்றால் அது குறித்து முழுமையாக விவாதித்து  இருக்க வேண்டும். கட்டுரை பெண்ணின் உடல் அரசியல் அல்லது பெண் மொழியின் தெளிவின்மை குறித்த நியாயமான நிதானமான பால் சார்பற்ற விவாதமாக எனக்கு தோன்றவில்லை .


தமிழச்சியின் கட்டுரையும் படிக்க நேர்ந்தது,.. அவரிடம் இருந்து நிறைய வேறுபட்டாலும் அக்கட்டுரை மேலும் விவாதங்களுக்கு எடுத்து செல்ல கூடிய மரபில் இருப்பதே போதுமானது.

http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai/

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/03/blog-post.html#comment-form

http://tamizachi.com/index.php?page=date&date=2009-12-06

2 கருத்துகள்:

 1. //...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

  லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பருக்கு, நீங்கள் குறிப்பிட்ட சுட்டியில் பெருந்தேவி/ஜமாலின் விமர்சனமும் லீனாவின் எதிர்வினையும் படித்தேன். நீங்கள் எடுத்துக்காட்டிய பத்தி குறித்து எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. முகத்தில் அறையும் உண்மை தான் அது. (எத்தனை முறை உண்மை முகத்தில் அறைந்தாலும் ஆண் கண்டுகொள்ளாமல் கம்பீரமாய்த் தான் நடந்து கொண்டு இருக்கிறான்.. என்ன செய்ய)
  மற்றபடி பெருந்தேவி/ஜமாலின் விமர்சனம் முக்கியமான ஒன்று. லீனாவின் அதற்க்கான எதிர்வினை சற்று பலவீனமாகவே உணர்ந்தேன். காரணம் ஜமால் குறிப்பிட்டது போல அந்த எதிர்வினை நிறைய இடங்களில் விமர்சனத்தை எதிர்கொள்ளும் குவிப்பு இல்லாமல் சிதறுவதே காரணம். முக்கிய விமர்சனம் மற்றும் பலமற்ற எதிர்வினை என்பதை தாண்டி அக்கவிதைகளின் பரப்பு நிச்சயம் என்னை கவர்ந்தது.அது சார்ந்த அரசியல் மொழி நிலைப்பாடு என பல தளங்களில் விவாதிக்க கூடிய ஒன்றாய் அக்கவிதைகள் நிற்கின்றன. (கருத்துக்கள் வேறுபடலாம் என்றாலும் கூட)
  நன்றி.

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...