வியாழன், 25 மார்ச், 2010

பகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)


 கீழ்வரும் பத்தி, தூக்கிலிடும் முன் பகத் சிங் பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய மனு.  எழுதப்பட்ட தேதி சரிவர நிறுவப்படவில்லை. 
 

பெறுநர்,
பஞ்சாப்  ஆளுநர்.

ஐயா,
 பெரு மதிப்புடன் கீழ்வருவனவற்றை உஙள் கவனத்திற்க்கு எடுத்துக் கொள்ளுமாறு இறைஞ்சிகிறோம்.

நாங்கள் அக்டோபர் 7,1930 அன்று ஒரு பிரிட்டிஷ் நீதி மன்றம் ,LCC தீர்ப்பாயத்தால்  (LCC Tribunal) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இத்தண்டனை லாகூர் சதிவழக்காக இந்திய பிரிட்டிஷ் அரசின் தலைவர் மாண்புமிகு வைஸ்ராய் அவர்களால் தொடுக்கப்பட்டது. எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம்,மாண்புமிகு இங்கிலாந்து மன்னர் மேன்மைதகு ஜார்ஜ் அவர்கள் மீது போர் தொடுத்தது என்பதாகும்.  இந்த குற்றம் இரண்டு முன் அனுமானங்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக பிரிட்டிஷ் தேசத்திற்க்கும் இந்திய தேசத்திற்க்கும் இடையே ஒரு போர் நடப்பது. இரண்டாவது நாங்கள் அதில் பங்கெடுத்து இருப்பதும் அதனாலேயே போர்க்கைதிகளாவோம் என்பதுமாகும்.

இந்த இரண்டாவது அனுமானம் சற்றூக் கவர்ச்சியானது போலுள்ளது. ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஈர்ப்பைக் கட்டுப்ப்படுத்த முடியவில்லை.
முதல் அனுமானத்தை பொறுத்தமட்டில், நாங்கள் அதற்கான சில விளக்கங்கள் தர வேண்டிய நிலையில் உள்ளோம். மேல் குறிப்பிட்டது போல் அப்படி எந்தப் போரும் நடப்பது போல தெரியவில்லை.
இருந்தாலும் அந்த அனுமானத்தை, அது முன்னிறுத்தும் முக்கியத்துவத்தை கொண்டு, அதன் மதிப்பை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள்.  ஆனாலும் அது குறித்து மேலும் புரிந்து கொள்ள நாங்கள், அதனை மேலும் விளக்க வேண்டியுள்ளது.  இங்கு போர்ச்சூழல் நிலவுவதையும் , சில ஒட்டுண்ணிகள் இந்திய அடித்தட்டு மக்களையும்,இயற்கை வளத்தையும் சூறையாடும் வரை அது தொடரும் என்பதையும் பிரகடனம் செய்கிறோம்.
இந்த ஒட்டுண்ணிகள், பிரிட்டிஷ் முதலாளியோ அல்லது இந்திய பிரிட்டிஷ் கலப்போ, அல்லது சுத்த இந்தியராகவோ கூட இருக்கலாம். அவர்கள் இந்த முறையற்ற சூறையாடலை  ஒருங்கிணைந்த இந்திய-பிரிட்டிஷ் அல்லது முழுமையான இந்திய அதிகார முறைகளின் படி நடத்தக்கூடும். இவை எதுவும் ஒரு பொருட்டேயில்லை. உங்கள் அரசாங்கம், எங்கள் மேல் தட்டு வர்க்க தலைவர்களை, அற்ப சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலம் வெல்ல முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்து, அதன் மூலம் எங்கள் முக்கிய சக்திகளின் ஒழுங்கை தற்காலிகமாய் சிதறடித்தாலும் பொருட்டில்லை. மேலும் இந்திய இயக்கத்தின் முதன்மையான புரட்சிக் கட்சியினர், போரின் தீவிரத்தில் தனித்து விடப்பட்டவர்களானாலும் ஒரு பொருட்டில்லை. எஙகள் மேல் காட்டிய பரிவிற்க்கும், அக்கறைக்கும் நாங்கள் மிகவும் கடன்பட்டிருக்கும் எங்கள் தலைவர்கள்....சுரணையற்றவர்களாகி , முதன்மையானவர்களாக கருதப்படும்  வீடற்ற, காசற்ற,  நட்பற்ற பெண் பணியாளர்களுக்காய் தங்கள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் புறக்கணித்து , காலாவதியான தங்கள் புனித (உட்டோப்பிய) அஹிம்சை மார்க்கத்திற்க்கு எதிரிகளாக அவ்ர்களை பாவிக்கிறார்கள் - எந்த உள்நோக்கமும் இன்றி தியாகங்கள் செய்து அல்லது தங்கள் கணவர்களையும் அண்ணன்மார்களையும் தங்கள் நெருக்கமான அன்பிற்க்குரியவர்களையும், தங்களையும் சேர்த்து தியாகங்கள் செய்ய தாரை வார்த்த , உங்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவர்களாய் பிரகடனப்படுத்தப்பட்ட, வணக்கத்திற்க்குரிய நாயகிகள் அவர்கள். உங்கள் தரகர்கள் , மிகக் கீழிறங்கி ,மாசற்ற அவர்கள் நடத்தையையும் அவர்கள் கட்சியின் மதிப்பையும் சீர்குலைக்க ஆதாரமற்ற இழிவுகளை ஜோடிக்கலாம். ஆனால் இவை எதுவுமே ஒரு பொருட்டே இல்லை. போர் தொடர்ந்தே தீரும்.

அது வெவ்வேறு காலகட்டத்தில வெவ்வேறு வடிவம் கொள்ளலாம். சிலசமயம் வெளிப்பபடையாக, சில சமயம் மறைமுகமாக சில சமயம் கலவரமாக சில சமயம் வாழ்வா சாவா போராட்டமாக ,எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அது ரத்தமூறிய வன்முறையாக நிகழ்வதோ அல்லது அமைதியாக நிகழ்வதோ உஙள் கையில் தான் உள்ளது. எது வேண்டுமென உங்கள் விருப்பத்திற்க்கேற்ப முடிவு செய்யுங்கள்.  ஆனால் முக்கியத்துவமில்லாத, அர்த்தமற்ற சமூக நீதிகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்த போர் முடிவின்றி தொடரும். சோஷலிச குடியரசு நிறுவப்பட்டு இப்போதைய சமூக ஒழுங்கிற்க்கு பதிலாய், சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட, எல்லா வகை சுரண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்ற , உண்மயான, நிலையான சமாதானம் நோக்கி மானுடத்தை முன்னகர்த்தும் புதிய சமூக ஒழுங்கு ஏற்படும் வரை இந்த போர் புதிய எழுச்சியுடன், இன்னும் அதிக தீவிரத்துடன், தணியாத உக்கிரத்துடன் நிகழும்.வெகு சீக்கிரத்தில் இறுதிப்போர் நடந்து இறுதி கணக்கு முடித்துக் கொள்ளப்படும்.

உங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த  போர் எங்களால் ஆரம்பிக்கப்படவுமில்லை. எங்களோடு முடியப் போவதுமில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத பின்விளைவுகள் இவை. எங்களின் தியாகங்கள் ,திரு தாஸ் அவர்களின் இணையற்ற தியாகம், தோழர் பகவத் சரண் அவர்களின் மேன்மை பொருந்திய தியாகம் மற்றும் எங்கள் பாசத்திற்குரிய போராளி ஆசாத் அவர்களின் உன்னத மரணம் இவற்றால் துல்லியமாக அழகுபடுத்தப்பட்ட சங்கிலித் தொடரில் ஒரு இணைப்பு மட்டுமே.

எங்கள் விதியின் படி நீங்கள் குறித்த நாளில் எங்களுக்கு மரணமளிப்பீர்கள் என்பது நிச்சயம். உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதிகாரமே இவ்வுலகின் மாபெரும் நீதி. உஙகளை வழிநடத்தும் அதிகபட்ச குறிக்கோள் ‘வலியவன் வைப்பதே நீதி’ என்பதே என்று எங்களுக்குத் தெரியும். எஙகளது வழக்கின் விசாரணை மொத்தமுமே அதற்கு சாட்சி. உஙகளுக்கு நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், உங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் படி, நாங்கள் போரில் ஈடுபட்ட போர்க்கைதிகள். அதனால் எஙகளைப் போர்க்கைதிகளாகவே பாவியுங்கள். அதாவது எங்களைத் தூக்கிலிடாதீர்கள். சுட்டுக் கொல்லுங்கள். உங்கள் நீதிமன்றம் சொன்னதை நீரூபிப்பது இனி உங்கள் கையில் உள்ளது.
உங்கள் ராணுவத்திடம், எங்களுக்குக் கொலை தண்டனை வழங்க ஒரு குழுவை அனுப்பச் சொல்லி ஆணையிடுமாறு உஙகளிடம் பணிவுடன் வேண்டிக்  கொள்கிறோம்.


உங்கள்,
பகத் சிங்.


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இது ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பு.
மூலம்: Words of Freedom  - Ideas Of a Nation Series  -- Bhagat Singh Penguin Books
ISBN:9780143068884

நான் ஒரு மொழி வல்லுனன் அல்ல. கையில் கிடைத்ததை ஆவணப்படுத்தும் ஆர்வத்தில் தான் இந்த மொழிபெயர்ப்பு. சறுக்கலான சில இடங்களை என்னால் உணர முடிந்தது. (குறிப்பாக பெண்கள் சார்ந்த கருத்துக்கள் உள்ள இடத்தில் அதன் வரலாற்றுப் பின்ணனி சரிவர பிடிபடாததால் சறுக்கியதோ என நினைக்கிறேன்)
புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்ததால்  ஆங்கில மூலத்தின் சுட்டி இல்லை.

6 கருத்துகள்:

 1. நல்லதோர் மொழிபெயர்ப்பு.
  சில இடங்களில் சிறு பிழைகள்.
  உ+ம் :முன்னிருத்தும் - முன்னிறுத்தும் எனவும்
  சூரையாடலை - சூறையாடல்
  எங்களுக்கு கொலை தண்டனை - எங்களுக்குக் கொலைத் தண்டனை எனவும் வருதல் நலம்

  பதிலளிநீக்கு
 2. >பெயரில்லா..பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக நன்றி..எல்லாவற்றையும் சரி செய்து உள்ளேன். (எப்போது இந்த ஒற்றுப்பிழை செய்வதை நிறுத்துவேனோ).. :-(

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு நண்பரே!!
  பகிர்வுக்கு நன்றி!!
  முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 4. பகத் சிங் தன்னை சுட்டு கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாக சொல்வது, அவர் வீரத்தை மிகைபடுத்துவதற்காக பரப்பப்பட்ட புனைவு என நினைத்தேன். அது உண்மை என நிறுவியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. > ஜான்.. உண்மையில் நானும் அதே உந்துதலில் தான் அந்த புத்தகத்தை எடுத்தேன். அந்த கடிதத்தின் ஆரம்பம் ஆங்கிலத்தில் இப்படி இருந்தது.."With Due Respect We beg You" அதுவும் முறையீடு என்பதால் கடையிலேயே படிக்க ஆரம்பித்தேன். பின் கடிதத்தின் போக்கு மற்றும் இன்ன பிற அவருடைய பேச்சுக்கள் முக்கிய ஆவணம் போல் தோன்றியதால் தான் புத்தகத்தை வாங்கினேன். பின்ன்னூட்டத்திற்க்கு நன்றி. :)

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...