வியாழன், 6 ஜனவரி, 2011

மும்பையிலிருந்து சென்னைக்கு

 
 
"கடவுளே, எத்தனை சிரமமான வேலையை தேர்ந்தெடுத்து உள்ளேன்.  காலையில் இருந்து சாயங்காலம் வரை ரோடில். இப்போதும் எனக்கு பயண சிரமங்கள் வரும், டிரைன் போக்குவரத்து பற்றிய கவலை, நேரத்துக்கு வாய்க்காத மோசமான சாப்பாடு, அன்பற்ற நிலைக்காத உறவுகள். எல்லாம் நாசமாய் போக." அவனது அடி வயிற்றில் லேசான அரிப்பை உணர்ந்தான்.

இது காப்காவின் 'உருமாற்றம்' (The Metamorphosis) நாவலில்  க்ரேகர் சம்சாவின் புலம்பல் . நல்ல வேளையாக எனக்கு அப்படி மோசமான வேலைகள் வாய்க்கவில்லை. அப்படி வாய்த்திருந்தால் நான் சமாளித்து இருப்பதும் சந்தேகம் தான். சம்சா அந்த நாவலில் ஒரு பூச்சியாக மாறிவிடுவதாக காப்கா  எழுதுகிறார். ஆள் முழுங்கும் வேலை பளு இது வரை எனக்கு இருந்ததில்லை. இருந்திருந்தால் நானும் ஒரு பூச்சியாகி இருப்பேன்.
எப்படியோ மும்பையில் இருந்து சென்னை கிளம்புகிறேன். வேறு வேலை . வேறு இடம். தமிழ்நாடு என்பதால்ரொம்ப சந்தோஷமும் கூட. அடுத்த நிமிடத்தில் வாழ்க்கை என்ன வைத்து இருக்கிறது என்று தெரியவில்லை தான். பாப்போம்.

2 கருத்துகள்:

  1. தாய் தமிழகம் வரவேற்கிறது.

    வாங்க பாஸு.. நாங்களும் அங்கெல்லாம் இருந்துட்டு வந்த ஆளு தான். :))

    பதிலளிநீக்கு
  2. நன்றி தல... சென்னை என்னை வாடா வெண்ணைனு சொல்லுது :)

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...