செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் பதில் கடிதம்

எனது யாமம் நாவல் விமர்சனத்தை எஸ்.ரா அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.பதில் எழுதி இருந்தார். சந்தோஷமாய் இருந்தது. :-)
பதில் கீழே.



”ஆழ்ந்து எழுதப்பட்ட விமர்சன்ம், நன்றாக உள்ளது, 
 
நாவல் ஒரு சேர்ந்திசை போன்றது, அதில் பல்வேறு இசைக்கருவிகள் பல்வேறு நிலைகளில் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருக்கும், மௌனமும் அதில் இசையே, சதாசிவ பண்டாரம் இந்த சேர்ந்திசையின் ஒற்றை புல்லாங்குழல்,
 
மற்றபடி பண்டாரங்களும் சாமியார்களும் ஜெமோவிற்கு மட்டுமே குத்தகை தரப்பட்டவர்களில்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே,
 
உங்கள் அன்பு
 
எஸ்ரா,”

2 கருத்துகள்:

  1. "படித்துறை" திரைப்படத்தில் பாடல் எழுதி கவிஞனாய் அவதாரமெடுத்திருக்கும் திரு."எஸ்ரா" வின் இந்த பதில் கடிதத்தை படைப்பாளியாய் நமக்கெல்லாம் விருந்தளிக்கப்போகும் இசை சம்பந்தப்பட்ட புதிய நாவலுக்கான அச்சாரம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி சேக்காளி.எஸ். ரா வின் கவிஞர் அவதாரம் புதிய சேதி. தகவலுக்கு நன்றி. இசையை பின்னணியாய் கொண்ட நாவல் தமிழுக்கு நல்ல வரவு தான் (மோக முள் தவிர அத்தகு நாவல் தமிழில் வரவில்லை என நினைக்கிறேன்)
    எஸ்.ராவின் எழுத்து அத்தகு நாவலுக்கு நிச்சயம் ஏற்ற ஒன்றாய் இருக்கும் . பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...