திங்கள், 4 ஜனவரி, 2010
என் இப்போதைய தேவை.
எனக்கு வேறுபாடுகளில் எப்போதும் நம்பிக்கை இல்லை. அது இனம் சார்ந்த மொழி சார்ந்த பால் சார்ந்த நாடு சார்ந்த நிறம் சார்ந்த எந்த வேறுபாடை இருந்தாலும்.
ஆனால் நம்மையும் மீறி சில சார்புகள் நம்முள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை மீறி வர பல சமயம் முடிவதில்லை.என்னளவில் சிலவற்றை நான் விரும்பி ஏற்றும் கொண்டுள்ளேன். அது நான் தமிழன் என்பது.
காரணம்? தமிழ் சமூகம் பிற சமூகங்களை காட்டிலும் உயர்குணங்கள் கொண்டதா? (அப்படியா என்ன?) இல்லை அதன் பழமையா? இல்லை என் பிறப்பா? எது எப்படி ஆகினும் என்னை நான் எப்போது தமிழ் பேசும் ஒருவனாக மட்டுமே அடையாளம் காண்கிறேன்.
அதன் பின் தான் எனது எல்லா அடையாளங்களும் வந்து ஒட்டி கொள்கின்றன.
தமிழ் சமூகத்திற்கு நீண்ட நெடிய மரபு உண்டு. அது எல்லாருக்குள்ளும் ஒரு அடையாளத்தை பச்சை குத்தி விடுகிறது. வலிய விலக முயற்சிப்பவர்களிடம் கூட.
மும்பை செம்பூரில் ஒரு மளிகை கடையில் சக்தி சாம்பார் பொடி பொட்டலத்தை பார்க்கும் போது சட்டென ஒரு சந்தோசம் வரும். இது எனக்கான இடம் என்ற எண்ணம். ஊரெல்லாம் சுத்தி விட்டு வீட்டுக்குள் வரும் போது அம்மா சமையல்கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்கும் போது ஒரு அன்யோன்ய உணர்வு ஏற்படுமே.. அது போன்ற மிக அகவயமான உணர்வு. அத்தகைய அன்யோன்யம் எனக்கு எப்போதும் தமிழ் சார்ந்த நிலைகளில் நிகழ்வதுண்டு. இது எனக்கானது என்று நான் கற்ப்பித்து கொண்டுள்ள சிலவற்றுள் முதன்மை என் மொழி தான் என்றே தோன்றுகிறது,
என்னை வெளிப்படுத்த எனக்கு தமிழ் தவிர வேறு எதுவும் அந்நிய மொழி தான். என் ஆங்கில வலைப்பூ சிலசமயங்களில் வெறும் சொற்குவியல் என்று தோன்றும். அதிலுள்ள பெரும் பங்கு என் மொழி திறமை இன்மையை மறைக்க முயன்றதே. சரி, தமிழில் நான் பெரும் மொழி வல்லுநனா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால், மொழி வெறுமனே தொடர்புக்கான கருவி என்னும் உபயோகத்தை தாண்டி என் இனம் என் பாரம்பரியம் என் அகம் இவற்றின் சான்றாக அமையும் போது 'அட' என்று மனம் பெருமிதம் கொள்ளும். இதை தவிர தமிழில் என் வலைப்பூவிற்கு எந்த பெரிய நோக்கமும் இல்லை.
நான் சற்று ஆசுவாசமாய் நடமாட ஒரு வெளி. இது தான் என் இப்போதைய தேவை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...

-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்