செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தமிழ் எண்கள் வழக்கொழிந்து விட்டதா?

இன்று தமிழ் எண்கள் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மும்பையில் எல்லா பஸ்களிலும்  மராத்திய எண்கள் தான்  உபயோகபடுத்தப்பட்டிருக்கும். . பேருந்து எண்களை பார்க்கும் போதெல்லாம் இதே போல தமிழில் எண்கள் உபயோகபடுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என யோசிப்பேன்.  யாருக்கும்மே அது புரியப் போவதில்லை. பேருந்து எண்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் பாடபுத்தகங்கள் கூட தமிழ் எண்களை சொல்லித் தருவதாய் தெரியவில்லை. இது பற்றி பேசிய போது என் நண்பன் தமிழில் எண்கள் உள்ளதா என கேட்டான்.
அதில் ஆச்சரியம் அடைய ஒன்றும் இல்லை. என் தாத்தா தமிழ் பேராசிரியராக இருந்ததால் எனக்கு எண்கள் குறித்து தெரிந்துள்ளது. இல்லையென்றால் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
நெட்டில் எதேனும் பதிவு இருக்கிறதா என பார்த்தேன்.
தமிழ் விக்கிபீடியாவில் எண்கள் குறித்த பதிவு இருப்பது சந்தோஷமாக இருந்தது.
தமிழில் எனக்கு 1-9 வரை எண்கள் இருப்பது 100, 1000 த்திற்க்கும் எண்கள் இருப்பதும்,fractions கூட தமிழில் இருப்பதை (அரைக்காணி, காணி, முந்திரி என்பதாக) அறிந்து கொண்டேன்.
இவை எல்லாம் முறையாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.
ஆனால் நிச்சயம் இனி தமிழ் எண்கள் புழக்கத்தில் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை. குறைந்த பட்சம் இவ்வெண்கள் பற்றி பள்ளிகளில் சொல்லி தரவாவது செய்யலாம்.
இல்லெயேல் உலகமயமாக்காலின் அவசரத்தில் கட்டாயம் மொத்தமாய் வழக்கொழிந்து போய் விடும்.

சுட்டிகள்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://tamilelibrary.org/teli/numeral.html

3 கருத்துகள்:

 1. பெயரில்லா..உங்க கேள்வி சரியா புரியலே.. மன்னிக்கவும் :(

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா '1/180' அரைக்காணியா பாவிச்சாங்களா என்று கேட்டிருக்கிறார்.அது '1/180'அல்ல அது '1/160'என்பதுதான் அரைக்காணி.இது பற்றிய விளக்கம் எனது வலைப்பூவான http://machamuni.blogspot.com/ ல் உள்ளது.
  நன்றி
  என்றென்றும் நட்புடன்
  சாமீ அழகப்பன்

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...