வியாழன், 25 பிப்ரவரி, 2010

நான் வைரஸாக பிறந்திருந்தால்


பைத்தியக்காரன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் ஆற்றிய
எதிர்வினை பொதுவில் என் உ குறித்த சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக இருந்ததால் அதை என் வலைப்போவில் பதிவிட தோன்றியது.
பைத்தியக்காரனின் பதிவு காதல் போன்ற உறவுகளின் புனிதம் வெறும் கற்பிதமே. இவற்றின் மூலம் சுயநலமே என்பதாக அமைந்த பதிவு
எனது எதிர்வினை..
நல்ல பதிவு...  இது குறித்து  எண்ணங்கள்.. உயிரியல் ரீதியான கட்டாயங்களை  சமூக அவதானிப்புகளோடு தொடர்புபடுத்தி  உறவுகள் குறித்து அணுகியுள்ளீர்கள். ஒழுக்கம் , புனிதம், சமூக நியாங்கள் எல்லாமே காலம் நிலவியல் கலாச்சாரப் பின்னணி இவற்றின் அடிப்படியில் நிகழ்ந்து தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவது. நேற்றைய தலைமுறை புனிதமாய் கருதியது இன்றைய தலைமுறை அசட்டுதனமாய் கருதுகிறது.  நமது புனிதங்கள் வேறு சமூகத்திற்கு ஒன்றுமில்லாததாய் தோன்றலாம். ஆக இவை  அறிவியல் விதிகள் அல்ல. இவை சமூகம் தன்  பாதுகாப்பிற்காக தான் தன் கட்டமைப்புக்கு உகந்த முறைகள் நெறிகள் புனிதங்கள் இவற்றை தன் மக்களின் மேல் திணிக்கிறது.. 
இது ஒரு புறம் .. ஆனால் உயிரியல் ரீதியான கட்டாயங்கள் அல்லது  உந்துதல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்தே இருக்கும்.இருக்க முடியும். இது டார்வினிய தத்துவம் அன்றி வேறொன்றும் புதிதல்ல. நம் எல்லா செயல்பாடுகளுமே நம்மை நிறுவுவதற்காக மட்டுமே நிகழ முடியும் என்பது உயிரியல் கோட்பாடு. உறவுகள் இதன் அடிப்படையில் உருவாகுபவை தான். காதலின் முக்கியமான நோக்கம் நீங்கள் சொல்வது போல் தன்னுள் உள்ள தன் எதிர்பாலினத்தை கண்டடையும் சந்தோசம் அல்ல. தன் இனத்தை பெருக்கு இயற்க்கை உந்துதலின் மேல் கட்டமைக்கபடும் உணர்வுகள். காதல் காமத்தின் கருவி என்பது தான் அதன் உயிரியல் நோக்கமாக இருக்க முடியும் . அனால் மனிதன் தன் சிந்தனைகள்  உணர்வுகள் இவற்றின் மூலம் அதற்க்கு மேலும் மேலும் அர்த்தங்கள்  கற்பித்து கொள்கிறான். அவ்வாறு வளர்த்து எடுத்து கொண்டும் உள்ளான். உயிரின் ஆதி இச்சைகளான  வாழுதல் மற்றும் இனம் பெருக்குதலை மீறி மானுடம் தன்னை நிகழ்த்தி உள்ளது. இதற்க்கு காரணம் மானுடத்திற்கு உள்ள சௌகர்யம் - சிந்தனை- ஆதி இச்சைகளை மிக சுலபமாய் பூர்த்தி செய்துவிடும் நிலை மனிதனுக்கு இருக்கும் போது அதை மீறி அவன் சிந்தனைகளை ஏதேனும் ஒன்றுக்கு அர்த்த படுத்தி கொள்ளும் நிலை அவனுக்கு உண்டு. உறவுகளை சார்பு - தேவை  என்ற ரீதியில் மட்டுமே பார்க்கும் மனநிலை சற்று அபாயகரமானது என்று அவன் உணர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் அப்படி நினைக்கும் போது அதை சுலபமாய் முறித்து கொள்ளவும் முடியும். இது சமூகம் என்ற சார்பு சார்ந்த கட்டமைப்பை சிதைக்கவும் கூடும். இதே அடிப்படையில் உயிரியல் ரீதியான விளக்கமும் கொள்ள முடியும். உணர்வு ரீதியான தொடர்பு வாழ்கையின் மிக சௌகர்யமான தொடர்புகளுக்கு ஏற்ற முறை. நம் மூளை எனும் தலைமை செயலகம் அதனாலே கர்பகலத்தில் ஒருவிதமான உணர்வுகள் ,எதிர் பாலிடம் ஒருவிதமான உணர்வுகள், மூப்பில் ஒருவித உணர்வுகளை நம்முள் நிகழ்த்துகிறது. இதே உணர்வு ரீதியான தொடர்பு ஒரு நாய் மனிதனிடம் கொண்டுள்ள உணர்வோடு பெரிதும் வேறுபடுவதல்ல. எத்தனை சுயநலமான தொடர்பு அது. ஆனால் நாய்க்கு தன் வளர்ப்பரிடம் உள்ள பிரியம் நிஜமே. ஜீன்ஸ்/செல்பிஷ் ஜீன்ஸ்  போன்ற புத்தகங்கள் சொல்லும்   அடிப்படை உயிரியல் சுயநலம் தான் எல்லாமே. 

சரி இதை உணர்வதில் உள்ள ஆபத்து என்ன? எதிலும் அதற்க்கான அர்த்தம் அல்லது புனிதம் இல்லை என உணரும் போது எல்லாமே சுயநலம் என்றாகும் ... பின் நாம் நமக்கு தேவை அற்ற எந்த உயிரையும் கொல்வதில் தவறில்லை என வாதிடலாம். இத்தகு சிந்தனை சமூகத்தின் நியயமாவோ விதியாகவோ ஆகும் போது உள்ள ஆபத்தை யோசியுங்கள். உண்மை, பொய், அறிவியல், கற்பிதம் இவை ஒரு பக்கம் இருக்க. எது சமூகத்திற்கு பாதுகாப்பான சிந்தனை எது சமூகத்தின் எல்லா மக்களுக்கும் ஆபத்தற்ற சிந்தனை என்பது தான் முக்கியம். இப்படி சமூக ரீதியில் சிந்திப்பதும் சுயநலம் தான். symbiosis என்ற உயிரியல் தொடர்பு parasitistic, mutualism, commensalism என வகைப்படும். இவை எல்லாமே சுயநலமான தொடர்புகள் தாம். ஆனால் அவற்றின்  முறைகள் வேறு வேறு. எது சரி எது தவறு என்று உயிர் வாதிடாது. எதோ ஒன்றை அது தேர்ந்தெடுக்கும். தனக்காக.. நான் ஒரு வைரஸாக  இருந்து இருந்தால் எனது முறை நிச்சயம் parasitism தான்.

நான் மனிதன். அதனால் உறவுகள் எனும் தொடர்பை எப்படி வேண்டுமானாலும் என்னால் கட்டமைக்க முடியும். என்னளவில் அது mutualism தான் என்று தோன்றுகிறது. நான் சார்ந்துள்ள சமூகமும் அதே mutualism கொண்ட ஒன்றை அமைவதே என் விழைவு. அது எனக்கும் என் சார்ந்து உள்ள அனைத்திற்கும் பாதுகாப்பானது. இதை நிலை நாட்ட சமூகம் புனிதம் என சொல்லட்டும்  ஒழுக்கம் என சொல்லட்டும் நான் அப்படியே ஏற்று கொள்கிறேன். ஏனெனில்  உண்மை பொய் குறித்த தேடல் இல்லை என் வாழ்கை. வாழ்வது மட்டுமே என் ஒரே சுயநல குறிக்கோள். ஆதலால் விதிகள் புனிதங்கள் ஒழுக்கங்கள் என்ற  கற்பிதங்களை  கேள்வி கேட்காமல் ஏற்று கொள்வேன். அது எனக்கும் என் சார்ந்து உள்ள அனைத்திற்கும் பாதுகாப்பானது என்று நான் உணரும் வரை.

3 கருத்துகள்:

 1. ஏனெனில் உண்மை பொய் குறித்த தேடல் இல்லை என் வாழ்கை. வாழ்வது மட்டுமே என் ஒரே சுயநல குறிக்கோள்//

  yadhaarthamana azhuthamaana vaarthaigal.

  ungaludaiya indha padhivai inru dhaan padithen. migavum arumai.

  niraya sindhikka vaikiradhu ungaludaiya indha padhivu..

  thodarungal ungal payanathai. Vaazhthukkal!

  பதிலளிநீக்கு
 2. request:

  word verification எடுத்து விடுங்க. பின்னூட்டம்(comments) செய்பவர்களுக்கு அது எரிச்சலூட்டலாம்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி அஷிதா..நிச்சயம் தொடர்கிறேன்.
  word verification எடுத்து விட்டேன். நண்பர் பிரசன்னாவும் இதை தான் சொன்னார். நன்றி.

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...