புதன், 22 செப்டம்பர், 2010

கமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.



கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை  மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த  பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.

---------------------------------------

நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம்.  ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்)  இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை  மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

 ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு  அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை  ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.

தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை.   இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு  தெரிந்தது  சாகெத் ராம் அல்ல  பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல்.  உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும்  கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.


------------------------------------------

7 கருத்துகள்:

  1. கமலின் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கின்றன. என்னைப்போன்றவர்களுக்கு அவை சுவையாக இருக்கின்றன. மற்ற மசாலாப்படங்களை விட அவை மிகவும் மேல்.

    ஆங்கிலப்படங்களை எவ்வளவு பேர் பார்த்து அவைகளின் காப்பி இந்தப்படங்கள் என்று கண்டு பிடிக்கப் போகிறார்கள். அப்படிப்பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் பிறந்ததிலிருந்து மற்றவர்களைக் காப்பியடித்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். வளர்ந்த பிறகு நம் தனித்தன்மையையும் வெளிக்காட்டுகிறோம். அப்படியே கமலஹாசனும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்டி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கந்தசாமிக்கு,
    கமல் படங்கள் ஜனரஞ்சகம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால் இந்த பிரச்னை இல்லை. ஆனால் அவர் அதை தாண்டி கலை முயற்சிகளில் முயல்பவர். எந்த கலைஞனும் தன் படைப்பு ஏதேனும் ஒன்றின் முக்கிய தாக்கம் பெற்ற படைப்பு என்றால் அதை குறிப்பிடுவது நாகரிகம் , நேர்மை.
    இங்கு கமலின் படங்கள் அவற்றின் மூலத்தின் அப்பட்ட காப்பி என குற்றம் சாட்டவில்லை. அல்லது அது கலை ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லாதது என்றும் சொல்லவில்லை.
    ஆனால் தன் மூலத்தை மறைத்து நிகழும் போது அந்த படைப்பின் நேர்மை அழிந்து விடுகிறது. அதுவும் கமல் போல தமிழ் சமூகத்தின் கிட்டதட்ட கலாச்சார அடையாளமாகவே இருப்பவர்களிடம் இத்தகு குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமை குறித்து என்னால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. உன்னை போல் ஒருவன் டைட்டில் கார்டில் கூட நீரஜ் பண்டே பெயரை பார்க்க முடியவில்லையே(ஊருக்கே தெரியும் அது a Wednesday ரீமேக் என்று). இது விஷியத்தில் தலிவர் மீது எனக்கும் வருத்தம் தான். தலீவர் ஏன் தான் இப்படியெல்லாம் அசிங்கபடுகிறாரோ?????????????

    பதிலளிநீக்கு
  4. கமல் படங்கள் ஜனரஞ்சகம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால் இந்த பிரச்னை இல்லை. ஆனால் அவர் அதை தாண்டி கலை முயற்சிகளில் முயல்பவர். ///

    அப்படிப்பட்ட கலைப்படைப்புகளின் சில துளிகளை கொஞ்சம் சொல்லுங்க பாஸ்...........
    கமலுக்கு சொந்த புத்தி கிடையாது என்பது பல படங்களின் காப்பியிலிருந்து தெரிகிறது. படைப்பாளியை விமர்சிக்காதீங்க படைப்பை விமர்சியுங்கன்னு யாராச்சும் சொன்னாங்கன்னா, கமலோட எல்லா படைப்பையும் (மிக அரிதான சில காட்சிகள் தவிர) துர்நாற்றம் பீடித்த மலம்னே சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் விமர்சனம் சற்று அதீதமாகவே எனக்கு தோன்றுகிறது. இவ்வளவு காட்டம் கொள்ள காரணம் என்ன என சொன்னால் அது குறித்து விவாதிக்கலாம். மற்றபடி கலையின் உச்சம் என சொல்ல எவ்வகையிலும் இயலாத போதும் கமலின் சில படங்கள் நிச்சயம் கலை முயற்சிகளாகவே எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...