வியாழன், 25 பிப்ரவரி, 2010

நான் வைரஸாக பிறந்திருந்தால்


பைத்தியக்காரன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் ஆற்றிய
எதிர்வினை பொதுவில் என் உ குறித்த சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக இருந்ததால் அதை என் வலைப்போவில் பதிவிட தோன்றியது.
பைத்தியக்காரனின் பதிவு காதல் போன்ற உறவுகளின் புனிதம் வெறும் கற்பிதமே. இவற்றின் மூலம் சுயநலமே என்பதாக அமைந்த பதிவு
எனது எதிர்வினை..
நல்ல பதிவு...  இது குறித்து  எண்ணங்கள்.. உயிரியல் ரீதியான கட்டாயங்களை  சமூக அவதானிப்புகளோடு தொடர்புபடுத்தி  உறவுகள் குறித்து அணுகியுள்ளீர்கள். ஒழுக்கம் , புனிதம், சமூக நியாங்கள் எல்லாமே காலம் நிலவியல் கலாச்சாரப் பின்னணி இவற்றின் அடிப்படியில் நிகழ்ந்து தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவது. நேற்றைய தலைமுறை புனிதமாய் கருதியது இன்றைய தலைமுறை அசட்டுதனமாய் கருதுகிறது.  நமது புனிதங்கள் வேறு சமூகத்திற்கு ஒன்றுமில்லாததாய் தோன்றலாம். ஆக இவை  அறிவியல் விதிகள் அல்ல. இவை சமூகம் தன்  பாதுகாப்பிற்காக தான் தன் கட்டமைப்புக்கு உகந்த முறைகள் நெறிகள் புனிதங்கள் இவற்றை தன் மக்களின் மேல் திணிக்கிறது.. 
இது ஒரு புறம் .. ஆனால் உயிரியல் ரீதியான கட்டாயங்கள் அல்லது  உந்துதல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்தே இருக்கும்.இருக்க முடியும். இது டார்வினிய தத்துவம் அன்றி வேறொன்றும் புதிதல்ல. நம் எல்லா செயல்பாடுகளுமே நம்மை நிறுவுவதற்காக மட்டுமே நிகழ முடியும் என்பது உயிரியல் கோட்பாடு. உறவுகள் இதன் அடிப்படையில் உருவாகுபவை தான். காதலின் முக்கியமான நோக்கம் நீங்கள் சொல்வது போல் தன்னுள் உள்ள தன் எதிர்பாலினத்தை கண்டடையும் சந்தோசம் அல்ல. தன் இனத்தை பெருக்கு இயற்க்கை உந்துதலின் மேல் கட்டமைக்கபடும் உணர்வுகள். காதல் காமத்தின் கருவி என்பது தான் அதன் உயிரியல் நோக்கமாக இருக்க முடியும் . அனால் மனிதன் தன் சிந்தனைகள்  உணர்வுகள் இவற்றின் மூலம் அதற்க்கு மேலும் மேலும் அர்த்தங்கள்  கற்பித்து கொள்கிறான். அவ்வாறு வளர்த்து எடுத்து கொண்டும் உள்ளான். உயிரின் ஆதி இச்சைகளான  வாழுதல் மற்றும் இனம் பெருக்குதலை மீறி மானுடம் தன்னை நிகழ்த்தி உள்ளது. இதற்க்கு காரணம் மானுடத்திற்கு உள்ள சௌகர்யம் - சிந்தனை- ஆதி இச்சைகளை மிக சுலபமாய் பூர்த்தி செய்துவிடும் நிலை மனிதனுக்கு இருக்கும் போது அதை மீறி அவன் சிந்தனைகளை ஏதேனும் ஒன்றுக்கு அர்த்த படுத்தி கொள்ளும் நிலை அவனுக்கு உண்டு. உறவுகளை சார்பு - தேவை  என்ற ரீதியில் மட்டுமே பார்க்கும் மனநிலை சற்று அபாயகரமானது என்று அவன் உணர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் அப்படி நினைக்கும் போது அதை சுலபமாய் முறித்து கொள்ளவும் முடியும். இது சமூகம் என்ற சார்பு சார்ந்த கட்டமைப்பை சிதைக்கவும் கூடும். இதே அடிப்படையில் உயிரியல் ரீதியான விளக்கமும் கொள்ள முடியும். உணர்வு ரீதியான தொடர்பு வாழ்கையின் மிக சௌகர்யமான தொடர்புகளுக்கு ஏற்ற முறை. நம் மூளை எனும் தலைமை செயலகம் அதனாலே கர்பகலத்தில் ஒருவிதமான உணர்வுகள் ,எதிர் பாலிடம் ஒருவிதமான உணர்வுகள், மூப்பில் ஒருவித உணர்வுகளை நம்முள் நிகழ்த்துகிறது. இதே உணர்வு ரீதியான தொடர்பு ஒரு நாய் மனிதனிடம் கொண்டுள்ள உணர்வோடு பெரிதும் வேறுபடுவதல்ல. எத்தனை சுயநலமான தொடர்பு அது. ஆனால் நாய்க்கு தன் வளர்ப்பரிடம் உள்ள பிரியம் நிஜமே. ஜீன்ஸ்/செல்பிஷ் ஜீன்ஸ்  போன்ற புத்தகங்கள் சொல்லும்   அடிப்படை உயிரியல் சுயநலம் தான் எல்லாமே. 

சரி இதை உணர்வதில் உள்ள ஆபத்து என்ன? எதிலும் அதற்க்கான அர்த்தம் அல்லது புனிதம் இல்லை என உணரும் போது எல்லாமே சுயநலம் என்றாகும் ... பின் நாம் நமக்கு தேவை அற்ற எந்த உயிரையும் கொல்வதில் தவறில்லை என வாதிடலாம். இத்தகு சிந்தனை சமூகத்தின் நியயமாவோ விதியாகவோ ஆகும் போது உள்ள ஆபத்தை யோசியுங்கள். உண்மை, பொய், அறிவியல், கற்பிதம் இவை ஒரு பக்கம் இருக்க. எது சமூகத்திற்கு பாதுகாப்பான சிந்தனை எது சமூகத்தின் எல்லா மக்களுக்கும் ஆபத்தற்ற சிந்தனை என்பது தான் முக்கியம். இப்படி சமூக ரீதியில் சிந்திப்பதும் சுயநலம் தான். symbiosis என்ற உயிரியல் தொடர்பு parasitistic, mutualism, commensalism என வகைப்படும். இவை எல்லாமே சுயநலமான தொடர்புகள் தாம். ஆனால் அவற்றின்  முறைகள் வேறு வேறு. எது சரி எது தவறு என்று உயிர் வாதிடாது. எதோ ஒன்றை அது தேர்ந்தெடுக்கும். தனக்காக.. நான் ஒரு வைரஸாக  இருந்து இருந்தால் எனது முறை நிச்சயம் parasitism தான்.

நான் மனிதன். அதனால் உறவுகள் எனும் தொடர்பை எப்படி வேண்டுமானாலும் என்னால் கட்டமைக்க முடியும். என்னளவில் அது mutualism தான் என்று தோன்றுகிறது. நான் சார்ந்துள்ள சமூகமும் அதே mutualism கொண்ட ஒன்றை அமைவதே என் விழைவு. அது எனக்கும் என் சார்ந்து உள்ள அனைத்திற்கும் பாதுகாப்பானது. இதை நிலை நாட்ட சமூகம் புனிதம் என சொல்லட்டும்  ஒழுக்கம் என சொல்லட்டும் நான் அப்படியே ஏற்று கொள்கிறேன். ஏனெனில்  உண்மை பொய் குறித்த தேடல் இல்லை என் வாழ்கை. வாழ்வது மட்டுமே என் ஒரே சுயநல குறிக்கோள். ஆதலால் விதிகள் புனிதங்கள் ஒழுக்கங்கள் என்ற  கற்பிதங்களை  கேள்வி கேட்காமல் ஏற்று கொள்வேன். அது எனக்கும் என் சார்ந்து உள்ள அனைத்திற்கும் பாதுகாப்பானது என்று நான் உணரும் வரை.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இசை குறித்த எனது அபத்தங்கள்..

எனது விண்ணை தாண்டி வருவாயா பதிவு அதன் என்னுடைய  எதிர்வினை இரண்டுமே  இசை குறித்த மிக அடிப்படை  பிழைகள் கொண்டவையாக அமைந்துவிட்டது குறித்து வருந்துகிறேன்.

பரிச்சயம் இல்லாத விஷயத்தில் அனுபவத்தை மட்டுமே வைத்து கருத்துக்களை உருவாக்கி கொள்வதில் உள்ள அபத்தம் புரிந்தது. அதனாலேயே ஒரு நாள் கழித்து அந்த பதிவுகளை அழிக்க நினைத்து பின் பிழை கொண்ட  பதிவுகளை உடனே நீக்குதலே நல்லது என்று தோன்றியதால உடனே நீக்கி விட்டேன்.

இனி இசை அல்லது எனக்கு பரிச்சியம்  இல்லாத ஆனால் நான் ரசிக்கும் கலைகள் பற்றிய பதிவுகள்  என் உணர்வு ரீதியான அனுபவ பகிர்தலாக மட்டுமே இருக்கும்.

பாலா கார்த்திக் மற்றும் இன்ன பிற இசை பிரியர்கள் கூறியது போல் இது பெரும் தவறு. வருந்துகிறேன்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஓவியர் ராஜம் மறைவு -- அஞ்சலி

ஓவியர் ராஜம் எனக்கு  இந்த பெயர்அதிகம் பரிச்சியம் இல்லாதது. ஆனாலும் அவரது ஓவியங்களை இணையத்தில்  கண்ட போது உடனே அட இவரா .. என்று சட்டென   இனம் கண்டு கொள்ள முடிந்தது..
அவரது ஓவியங்களை பல சற்று பழைய பத்திரிக்கைகளில் பார்த்து அனுபவித்தது உண்டு. பாரம்பரிய ஓவிய முறையில் நிச்சயம் தமிழின் முக்கியமான ஓவியராகவே கருத முடியும். (எனக்கு ஓவிய ஞானம் குறைவு என்ற போதும்) ..
தனது தொன்னூற்று ஓராம் வயதில் காலமடைந்த அவருக்கு எனது அஞ்சலி.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...